वरवरमुनिमेव चिन्तयन्ती मतिरियमेति निरत्ययम् प्रसादम्॥ २१
॥ इति श्रीयतिराजविंशतिः समाप्ता॥
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை.
वरवरमुनिमेव चिन्तयन्ती मतिरियमेति निरत्ययम् प्रसादम्॥ २१
॥ इति श्रीयतिराजविंशतिः समाप्ता॥
விஜ்ஞாபநம் யதி3த3மத்3ய து மாமகீநம் அங்கீ3குருஷ்வ யதிராஜ! த3யாம்பு3ராஷே |
அஜ்ஞோऽயமாத்ம கு3ணலேS விவர்ஜிதSQச தஸ்மாத3நந்யSரணோ ப4வதீதி மத்வா ||
பொருள்:
யதிராசனே! கருணைக் கடலே! நான் தத்வம், ஹிதம், புருஷார்த்தம் போன்ற உயர்ந்த உண்மைகளை அறியாதவன் என்றும், எவ்விதமான ஆத்ம குணங்களும் அற்றவன் என்றும் உணர்ந்து கொள்ளுங்கள். தேவரீருடைய கருணையையும், இரக்ஷகத்தையும் வேண்டும் என்னுடைய பிரார்த்தனையை ஏற்று அருள் புரிய வேண்டுகிறேன்.
விளக்கவுரை:
ஸ்வாமி மணவாள மாமுனிகள் மூன்றாவது பாசுரமான (வாசா யதீந்த்3ர! மநஸா வபுஷா ச யுஷ்மத்) என்ற பாசுரத்திலே தொடங்கி இதற்கு முந்தைய பாசுரம் வரை எம்பெருமானாரிடம் பல பிரார்தனைகளையும், விண்ணப்பங்களையும் செய்கிறார். இந்தக் கடைசிப் பாசுரத்திலே அந்தப் பிரார்த்தனைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு அருள் புரியவேண்டுமென்று ஸ்வாமி இராமானுசரிடம் இறைஞ்சி யதிராஜ விம்ஸதியைத் தலைக்கட்டுகிறார்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
ஸ்ரீமந்! யதீந்த்3ர! தவ தி3வ்யபதா3ப்3ஜஸேவாம் ஸ்ரீஸைலநாத2 கருணாபரிணாமத3த்தாம்
தாமந்வஹம் மம விவர்த4ய நாத2! தஸ்யா: காமம் விருத்3த4மகி2லம் ச நிவர்தய த்வம்
பொருள்:
இராமானுசா! எம்பெருமானாரே! தங்களுடைய திருவடித்தாமரைகளின் தரிசனத்தை நாள்தோறும் பெற அருளவேண்டும். அந்த பாக்கியம் எனக்கு என்னுடைய ஆசாரியரான திருவாய்மொழிப் பிள்ளையின் அருளால் எனக்குக் கிட்டியது. என் ஆசாரியருக்கு என்மேல் உள்ள அபார காருண்யத்தினாலேயே எனக்கு அந்த பாக்கியம் கிட்டியது. தங்களுடைய திருவடி தரிசன பாக்கியத்திற்க்குத் தடையாக இருக்கும் யாதொறு ஆசையையும் விலக்க வேண்டுகிறேன்.
விளக்கவுரை:
ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்முடைய ஆசாரியரான திருவாய் மொழிப்பிள்ளையின் (ஸ்ரீஸைல நாதர்) விண்ணப்பத்தினாலேயே யதிராஜ விம்ஸதியை அருளிச்செய்தார். அந்த காரணத்தினாலேயே ஸ்வாமி இராமானுசரின் திருவடி தரிசனம் கிட்டியதாகவும், அந்த பாக்கியும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
காலத்ரயேऽபி கரணத்ரய நிர்மிதாதி பாபக்ரியஸ்ய Sரணம் ப4க3வத்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலாரமணேऽர்தி2தா யத் க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்3ர! ப4வச்ச்2ரிதாநாம் ||
பொருள்:
ஸ்வாமி இராமானுசா! மனத்தாலும், உடலாலும், வாக்காலும் கணக்கற்ற பாபங்களைப் புரிந்த ஒருவனுக்கு திருவரங்கத்திலே எழுந்தருளியிருக்கும் அரங்கநாதன் ஒருவனே முக்காலத்திலும் புகலிடம். உண்மையில், அரங்கநாதனிடம் பங்குனி உத்திர நன்நாளிலே சரணாகதி கத்யம் மூலம் தாங்கள் செய்த பிரார்த்தனையே எங்களுடைய பாதுகாப்பாகும். அதுவே எங்களுடைய ஒரே அரண்.
விளக்கவுரை:
எம்பெருமானார் சரணாகதி கத்யத்திலே அரங்கநாதனிடம் செய்த பிரார்த்தனையையும், அதற்கு அரங்கநாதனின் மறுபடியையும் இங்கே ஸ்வாமி மணவாள மாமுனிகள் நினைவு கூர்கிறார். அரங்கநாதன் ஸ்வாமி இராமானுசரின் சரணாகதியை ஏற்று எம்பெருமானார் மட்டுமின்றி எம்பெருமானாரின் சம்பந்தம் உடைய எல்லோரும் தன்னுடைய கருணைக்குப் பாத்திரமானவர்கள் என்று அறுதியிட்டான். இந்த சம்பந்த வரத்தையே மாமுனிகள் இங்கே வேண்டுகிறார். ஆசார்ய இராமானுச சம்பந்தம் நம்முடைய பெரும் அதிருஷ்டமே ஆகும்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
श्रुत्यग्रवेद्य निजदिव्यगुणस्वरूपः प्रत्यक्षतामुपगतस्त्विह रन्ग्गराजः।
वश्यस्सदा भवति ते यतिराज! तस्मात् शक्तस्स्वकीयजन पापविमोचने त्वम्॥ १७
SQருத்யக்3ரவேத்3ய நிஜதி3வ்யகு3ணஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபக3தஸ்த்விஹ ரங்க3ராஜ:
வSQயஸ்ஸதா3ப4வதி தே யதிராஜ! தஸ்மாத் Sக்த்ஸ்ஸ்வகியஜந பாபவிமோசநே தவம் ||
பொருள்:
யதிராசனே! ஸ்ரீரங்கநாதன் உலகத்தோர் எல்லோருடைய சந்தோஷத்திற்க்காக ஸ்ரீரங்கத்திலே ஸேவை ஸாதிக்கிறான். வேதங்களினால் பிரகடணப்படுத்தப் பட்டுள்ள அர்த்தங்களாலேயே நம்மால் அவனுடைய கல்யாண குணங்களை புரிந்துகொள்ளமுடியும். நிகரில்லாத சக்தியையும், புகழையும் உடைய அந்த அரங்கநாதனே உமக்கு கட்டுப்பட்டு இருக்கிறான். ஆகையால், ஆசார்ய ஸார்வபெளமா! நீரே என்னுடைய துன்பங்களைப் போக்க வல்லவர்.
விளக்கவுரை:
அரங்கநாதன் ஸ்வாமி இரமானுசருடைய செல்வாக்குக்குக் கட்டுப்பட்டவன் என்பது உலகறிந்த உண்மை. இவ்வுண்மையை மாமுனிகள் எம்பெருமானாருக்கு நினைவு கூர்கிறார். ஸ்வாமி மணவாள மாமுனிகள் மேலே விளக்கிய பல பாசுரங்களில் எம்பெருமானின் கருணையைவிட எம்பெருமானாரின் கருணையையே வேண்டுகிறார். இதற்கு மறுபடியாக ஸ்வாமி இராமானுசர் திருவரங்கத்து அரங்கநாதனே மாமுனிகளின் துன்பங்களைப் போக்கி அவர் வேண்டும் வரங்களை அளிக்க வல்லவன், தான் அல்லன் என்று கூறுவதாகக் கொண்டு, அதற்கு இப்பாசுரத்திலே விளக்கம் அளிக்கிறார். அரங்கநாதனிடம் வேண்டாமல் ஸ்வாமி இராமானுசரிடம் வேண்டுவது பொருத்தமற்ற செயல் என்று தோன்றுவார்க்காக இப்பாசுரத்தை மாமுனிகள் வழங்குகிறார். ஸ்வாமி இராமானுசருக்கும் அரங்கநாதனுக்கும் இடையே சரணாகதி கத்யத்திலே நடந்த உரையாடலை இப்பாசுரத்திலே மாமுனிகள் நினைவுகூர்கிறார்.
மேலும், அரங்கநாதன் எம்பெருமானாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் என்பது ஒரு சிறு சம்பவத்தால் விளக்கப் படுகிறது. ஒரு சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவ சலவையாளன் ஒருவன் அரங்கநாதனின் பரிவட்டங்களை மிகச் சுத்தமாகத் தோய்த்து நல்லவண்ணம் மடித்து ஸ்வாமி இராமானுசரிடம் சமர்பித்தான். சலவையாளனின் இந்த கைங்கர்யத்தினால் திருவுள்ளத்திலே மிக்க சந்தோஷம் கொண்ட ஸ்வாமி இராமானுசர் அந்த சலவையாளனை அரங்கநாதனின் சன்னிதிக்கு அழைத்துச் சென்று அவனுக்கு அனுக்ரகம் செய்தருள அரங்கநாதனிடம் வேண்டினார். அரங்கநாதனும் அவ்வண்ணமே இசைந்து தம் திருக்கண்கள் மலர்ந்து ஆசார்யன் விண்ணப்பப்படியே அந்த சலவையாளனை அனுக்ரகித்தார். அப்பொழுது அரங்கநாதன் எம்பெருமானாரிடம் அந்த சலவையாளன் தாம் கிருஷ்ணாவதாரத்திலே எழுந்தருளியிருந்த போது தமக்குச் செய்த அபசாரத்தையும் மன்னித்துவிட்டதாகத் திருவாக்கு அருளினார். கிருஷ்ணாவதாரத்தின் போது அந்த சலவையாளன் கம்ஸனுடைய சபையிலே பணியாற்றியவன். ஒருசமயம் மதுராவிலே கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் அவர்களுடைய பரிவட்டங்களைக் கொடுக்க மறுத்தவன். அத்தகையவனையும் எம்பெருமானனருடைய விண்ணப்பத்தினால் அரங்கநாதன் அனுக்ரகித்தது ஸ்வாமி இராமானுசரிடம் அரங்கநாதனுக்கு உள்ள மேன்மையான பந்தத்தையே விளக்குகிறது. இந்த சம்பந்தத்தையே ஸ்வாமி மணவாள மாமுனிகள் இங்கே குறிப்பிடுகிறார். இத்தகைய உயர்ந்த சம்பந்தம் உடையவராதலால் ஸ்வாமி இராமானுசரே மாமுனிகளின் துன்பங்களைப் போக்க வல்லவர் எனத் தலைக்கட்டுகிறார்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
शब्दादिभोगविषया रुचिरस्मदीया नष्टा भवत्विह भवद्दयया यतीन्द्र।
त्वद्दासदासगणना चरमावधौ यः तद्दासतैकरसताऽविरता ममास्तु॥ १६
Sப்3தா3தி3போ4க3விஷயா ருசிரஸ்மதீ3யா நஷ்டா ப4வத்விஹ ப4வத்3த3யயா யதீந்த்3ர |
த்வத்3தா3ஸதா3ஸக3ணநா சரமாவதெள4 ய: தத்3தா3ஸதைகரஸதாऽவிரதா மமாஸ்து ||
பொருள்:
யதிராசனே! என் சரீர சம்பந்தத்தினால் கிடைக்கும் சிற்றின்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைத் துறக்க அருள் புரியவேண்டுகிறேன். பிற்காலத்தில் துன்பத்தையே உண்டாக்கும் அந்த சிற்றின்பங்களின் மேல் உள்ள விருப்பத்தை சுவையை உம்முடைய தயையால் அகற்ற வேண்டுகிறேன். உம்முடைய அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியாராய் என்றென்றும் நீடித்து இருக்கக்கூடிய நிலையை வழங்க வேண்டுகிறேன். உமக்கு சமர்ப்பிக்க என்னிடம் எதுவுமேயில்லை. உம்முடைய நிர்ஹேதுக கருணையையே என்னை இரட்சிக்க வேண்டும்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
S¦த்3தா4த்ம யாமுநகு3ரூத்தம கூரநாத2 ப4ட்டாக்2ய தே3S¢கவரோக்த ஸமஸ்தநைச்யம் |
அத்3யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே தஸ்மாத்3யதீந்த்3ர கருணைவ து மத்3க3திஸ்தே
பொருள்:
இராமானுசா! உயர்ந்த உத்தமமான ஆசார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பராசர பட்டர் போன்றோர் வெளிப்படுத்திய சுய கண்டன உணர்வுகள் அனைத்தையும் முழுமையாக நான் சொந்தமாகக் கொண்டிருக்கிறேன். ஆகையால், யதிராசனே! உம்முடைய கருணைக்கு நானே பொருத்தமானவன்.
விளக்கவுரை:
ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த பாசுரத்திலும் நைச்சிய பாவத்தையே தொடர்கிறார். எம்பெருமானாரின் கருணைக்குத் தம்மை விட சிறந்த தகுதியானவன் இருக்கவே முடியாது என்று அறுதியிடுகிறார். மாமுனிகள் இங்கே குறிப்பிடும் உயர்ந்த ஆசார்யர்கள் அனைவரையும் சுத்த ஆத்மாக்கள் என்றும், குற்றமற்றவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். அர்ச்சா மூர்த்தியாகத் திருவரங்கத்திலும், காஞ்சியிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் கருணையை வேண்டியே தங்களை பாபிகள் என்று கூறியுள்ளனர்.
ஸ்வாமி ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்திலே தாம் உபயோகமற்றவன் என்று இரண்டு ஸ்லோகங்களிலே விவரிக்கிறார். “ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே (23)” மற்றும் “அமர்யாத: க்ஷூத்ர: (62)” ஆகிய ஸ்லோகங்களில் ஸ்வாமி ஆளவந்தார் தம்மை சாஸ்திரங்களினால் புறக்கணிக்கப்பட்ட, இகழக்கூடிய, வெறுக்கக்கூடிய எல்லா பாபங்களையும் செய்தவன் என்றும், அகந்தையுள்ளவனென்றும், தாழ்ந்தவனென்றும் கூறிக்கொள்ளுகிறார். அவர் இவ்வாறு கூறுவதற்க்குக் காரணம் நம்போன்றவர்களையெல்லாம் தம்முடைய திருவுள்ளத்தில் கொண்டு எம்பெருமானிடம் அவன் கருணையைப் பெருவதற்க்காகவேயாம்.
கூரத்தாழ்வான் மேலே கூறியதுபோலே தாப த்ரயங்களினால் பலப்பல குற்றங்களைச் செய்தவன் தான் என்று கூறுகிறார். ஸ்வாமி மணவாள மாமுனிகள் அதே பாவனையை இங்கே வெளிப்படுத்துகிறார். இத்தகைய பாவனையையே பராசர பட்டரும் அரங்கநாதனிடம் வெளிப்படுத்துகிறார்.
ஸ்வாமி தேசிகன் தம்முடைய நைச்யாநுசந்தான நிலையை பலப்பல ஸ்லோகங்களில் வெளிப்படுத்தி உள்ளார். திருவஹீந்திபுரம் தேவநாதப் பெருமாளுடன் நெஞ்சுருக்கும் தம்முடைய சம்பாஷணையிலே ஸ்வாமி தேசிகன் தன்னுடைய குறைகளினால் பச்சாதாபம் கொண்டு தம்மை தாழ்திக்கொள்கிறார். இந்த ஸ்லோகங்கள் அவருடைய மனநிலையைக் குறிக்கின்றனவேயன்றி அவருக்கு குற்றமேதும் இல்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
தேவநாதனே! சாஸ்திரங்களின் உண்மையான பொருளை அறியாத அங்ஞானக் கடல் உண்மையில் நான் ஒருவனே ஆகும். பாபங்களையே செய்வது என்று சபதம் எடுத்துக்கொண்டுள்ளவர்களில் முதன்மையாக நான் நிற்கிறேன். உன்னுடைய கட்டளைகளையெல்லாம் வரம்பு மீறுவதிலும் நானே முதன்மையானவன். இப்படி உதவியற்ற நிலையில் இருக்கும் நானே உன்னுடைய கருணைக்கு மிகவும் தகுதியுடையவன். எல்லாம் அறிந்த ஸர்வ ஞானஸ்தனாகிய நீ உன்னுடைய கருணைக்கு என்னைத்தவிர வேறு ஒருவரை எவ்வாறு கருதலாம்?
மற்றொரு இடத்திலே ஸ்வாமி தேசிகன் தன்னை அபராத சக்ரவர்த்தி என்று கூறிக்கொண்டு எம்பெருமானின் கருணையை இறஞ்சுகிறார்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
வாசாமகோ3சர மாஹாகு3ண தே3S¢காக்3ர்ய கூராதி4நாத2 கதி2தாகி2ல நைச்யபாத்ரம் |
ஏஷாऽஹமேவ ந புநர்ஜக3தீத்3ருSஸ்தத் ராமாநுஜார்ய! கருணைவ து மத்3க3திஸ்தே ||
பொருள்:
இராமானுசா, ஆசாரியனே! இந்த உலகிலே தண்டனைக்குரிய, குற்றமுடைய, உபயோகமற்ற குணங்களையெல்லாம் பொருந்திய ஒருவன் நான் ஒருவனாகவே இருக்கமுடியும். என்னைத்தவிர வேறு எவரும் இதற்க்குப் பொருத்தமாகவே முடியாது. ஆகையினாலேயே, என்னுடைய இந்த குற்றங்களிலிருந்தும், தடைகளிலிருந்தும் என்னை நீக்க உம்முடைய கருண ஒன்றே பொருத்தமானது என்று முடிவுற்றேன். அக்கருணையால் என்னை காக்க வேண்டுகிறேன்.
விளக்கவுரை:
மிகச்சிறந்த ஆசார்யனும், எம்பெருமானார் இராமானுசரின் தலையாய சீடருமாய கூரத்தாழ்வான் ஸ்ரீவரதராஜஸ்தவம், ஸ்ரீவைகுந்தஸ்வம் என்ற உயர்ந்த பிரபந்தங்களிலே தம்மை இவ்வுலகிலேயே தாழ்ந்த ஒரு பாபி என்று தாழ்த்திக்கொள்கிறார். ஒரு சுய பச்சாதாபத்தினாலேயே இவ்வாறு ஆழ்வான் கூறுகிறார். எம்பெருமானின் முன் உயர்ந்த நம்முடைய ஆச்சார்யர்கள் இங்கனம் சுய கண்டனத்தினால் தங்களைத் தாழ்த்திக்கொள்வது அவர்களிடம் அத்தகைய குற்றங்கள் உள்ளன என்பதனாலன்று. அவர்கள் அங்கனம் செய்வது நம்முடைய நன்மையை மனதிலேகொண்டே ஆகும். நம்முடைய பாபங்களை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே ஆகும். இந்நிலையையே ஸ்வாமி மணவாள மாமுனிகளும் காட்டுகிறார்.
மாமுனிகள் “வாசாமகோசர மாஹாகுண தேS¢காக்ர்ய” என்று கூரத்தாழ்வானைக் கொண்டாடுகிறார். கூரத்தாழ்வானின் எண்ணற்ற மங்களகரமான கல்யாண குணங்களை நாவினால் விவரிக்க இயலாதென்று வியக்கிறார். மேலே கூறிய பிரபந்தங்களிலே கூரத்தாழ்வான் காட்டியுள்ள நைச்சியாநுசந்தானத்திற்க்குக் காரணம் நம்மையெல்லாம் பாபங்களிலிருந்து விலக்க எம்பெருமானிடம் வேண்டுவதற்க்கே ஆகும். ஸ்வாமி மணவாள மாமுனிகள் கூரத்தாழ்வான் காட்டியுள்ள அத்தகைய நைச்யாநுசந்தானத்திற்க்கும் தாமே எல்லா உலகங்களிலும் பொருத்தமானவன் என்கிறார். ஆகையினால் இராமானுசரின் கருணைக்கு இலக்காக மாமுனிகளை விட வேறு எவரும் இருக்கமுடியாது என்று தலைக்கட்டுகிறார். திருவரங்கத்து அமுதனாரும் இக்கருத்தையே “நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின்கண் அன்றிப் புகல் ஒன்றுமில்லை, அருட்க்கும் அஃதேபுகல்” என்ற இராமானுச நூற்றந்தாதி பாசுரத்திலே அருளிச்செய்கிறார்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
பொருள்:
சந்யாசிகளின் அரசனே! மூன்று விதமான தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களினால் என் உடம்பு துன்பமும், வேதனையும், நோய்களையும் அடைகிறது. என்னால் அத்துன்பங்களைத் தாங்கமுடியவில்லை. இருப்பினும், இவ்வுடலை விட்டு நீங்க எனக்கு எனக்கு எந்த விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் நான் இந்த உடலை நன்கு பேணிப் பாதுகாக்கிறேனே! நான் குவித்து வைத்திருக்கும் என்னற்ற பாபங்களே என்னுடைய இந்த மனநிலைக்குக் காரணம். எந்தோ பரிதாபம்! என்னுடைய பரமாசாரியனே! தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களிலிருந்து நான் விடுபட என் பாபங்களையெல்லாம் அகற்ற இறைஞ்சுகிறேன்.
விளக்கவுரை:
ஆத்யாத்மிகம், ஆதிபெளதிகம், ஆதிதைவிகம் என்பனவையே தாப த்ரயங்கள். முதலாவதான ஆத்யாத்மிகம் என்பது நம் கைகளாலும், கால்களாலும், மற்றைய உடல் உருப்புகளாலும் உண்டாகும் துன்பங்கள். இது இரண்டு வகைப்படும். சரீரம் மற்றும் மானஸம். சரீரம் என்பது வியாதி எனவும், மானஸம் என்பது ஆதி எனவும் உணரப்படுகிறது. இவையிரண்டும் சேர்ந்து ஆத்யாத்மிகம் எனப்படுகிறது.
இரண்டாவதான ஆதிபெளதிகம் என்பது விலங்குகளாலும், மனிதர்களாலும், அசுரர்களாலும் உண்டாகும் துன்பங்களாகும்.
மூன்றாவதான ஆதிதைவிகம் என்பது காற்று, மழை, குளிர் போன்ற இயற்க்கையின் சீற்றத்தினால் உண்டாகும் துன்பங்களாகும்.
இம்மூன்றையும் சேர்த்தே “தாபத்ரயீஜநித து3:க2” என்று ஸ்வாமி மணவாள மாமுனிகள் சொல்லுகிறார். தாப த்ரயங்களினால் உண்டாகும் இத் துன்பங்களை எல்லாம் தாம் இன்பம் என்று எண்ணும் குற்றத்திற்க்குத் ஆளானதாக மாமுனிகள் கூறுகிறார். இத்தகைய தம்முடைய நிலைக்குத் தன்னுடைய பாபங்களே காரணம் என்கிறார். இந்நிலையில், எங்கும் நிறைந்துள்ள எம்பெருமானை முற்றும் உணர்ந்த என்பெருமானாரிடம் தன்னுடைய பாபங்களையெல்லாம் கருணையுடன் நீக்கும்படி வேண்டுகிறார்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
யதிராஜா! எவனொருவன் தான் செய்யும் பாபங்களை எண்ணித் துக்கமும், பயமும், பச்சாதாபமும் கொள்கிறானோ, அவன் அதே பாபங்களை மீண்டும் மீண்டும் எங்கனம் செய்வான்? அனால் நானோ, நான் செய்யும் பாபங்களைப் பற்றி சிறிதளவேணும் வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாதவனாயிருக்கிறேன். ஆகையினாலேயே நான் மீண்டும் மீண்டும் அப்பாபங்களைச் செய்துகொண்டே இருக்கிறேன்.
விளக்கவுரை:
நாம் செய்யும் பாபங்களிலிருந்து விடுபடுவது என்பது இவ்வுலகில் இயலாத காரியம். இருந்தாலும், எவனொருவன் தான் செய்யும் செய்த பாபங்களை எண்ணி பயமும், வெட்கமும், வெறுப்பும் கொள்கிறானோ அவனுக்கு பிராயச்சித்தம் உண்டு என்பது மோலோர் வாக்கு. இந்நிலைக்கு வந்தபின் குறந்த பட்சம் அவன் தெரிந்தே அந்த பாபங்களைச் செய்யமாட்டான். ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த நிலையையே இங்கே குறிப்பிடுகிறார். தான் தன்னுடைய பாபங்களை எண்ணி வெட்கப்படுவதில்லை என்று குறைபடுகிறார். இந்நிலையிலிருந்து தம்மை மாற்ற எம்பெருமானாரின் கருணையை வேண்டுகிறார்.
தம் பாபங்களை எண்ணி வெட்கப்படவேண்டிய நிலையை பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி தம்முடைய ஸ்ரீவசனபூஷணத்தின் வியாக்கியானத்திலே ஒரு சிறு சம்பவத்தின் மூலம் விவரிக்கிறார். ஸ்வாமி கூரத்தாழ்வானுக்கு சேரப்பிள்ளை பிள்ளையாழ்வான் என்றொரு சிஷ்யன் இருந்தார். அவர் மிகுந்த அகந்தையும், செருக்கும், இறுமாப்பும் உடையவராய் பல பாகவத அபசாரங்களைச் செய்துவந்தார். ஸ்வாமி கூரத்தாழ்வான் அவரை ரக்ஷிக்க திருவுள்ளம் கொண்டார். ஒருநாள் அந்த சிஷ்யனிடம் கூரத்தாழ்வான் தமக்கு ஒரு தானம் அள்ளிக்குமாறு விண்ணப்பித்தார். பிள்ளையாழ்வான் மிக்க ஆனந்தத்துடனும், கிளர்ச்சியுடனும் தம்முடைய ஆசார்யன் திருவுள்ளத்தை நிறைவேற்ற ஒப்புவித்தார். மனத்தாலும், வாக்காலும், உடலாலும் ஒருபோதும் பாகவத அபசாரம் செய்யமாட்டேன் என்ற சத்தியத்தையே கூரத்தாழ்வான் தன் சிஷ்யனிடம் ஒரு உதக தானமாக பெற்றுக்கொண்டார். பிள்ளையாழ்வானும் அங்கனமே நடந்துவந்தார். ஒருசமயம், அவர் தன்னுடைய புத்திக்குறைவால் பாகவத அபசாரத்தை செய்ய நேர்ந்தது. தாம் செய்த பாபத்தை உணர்ந்த பிள்ளையாழ்வான், மிகுந்த வெட்கத்துடன் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குச் செல்லாமலேயே இருந்தார். சிஷ்யனைக்காணாத கூரத்தாழ்வான், பிள்ளையாழ்வான் இல்லத்திற்குச்சென்று நடந்ததை அறிந்தார். தன் திருவடிகளில் விழுந்த பிள்ளையாழ்வானைக் கைக்கொண்டு கூரத்தாழ்வான் பின்வறுமாறு உப்தேசித்தார்: “நீர் உம்முடைய பாகவதர்களுக்கு மானசீகமாகச் செய்த அபசாரத்தைப் பற்றி மனத்தால் வெட்கமும், வேதனையும் உடையவராயிருந்தால் சர்வேஸ்வரன் அதை மன்னிப்பான். நீர் உடலால் செய்யும் குற்றங்களுக்கு அரசன் தகுந்த தண்டனையளிப்பான். ஆகையால் உம்முடைய சத்தியத்திலே உறுதியாக இரும்”.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசாரியன் திருவடிகளே சரணம்
ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா யோஹம் சராமி ஸததம் த்ரிவிதா4பசாராந்
ஸோஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்3வதே3வ காலம் நயாமி யதிராஜ! ததோऽஸ்மி மூர்க2:
பொருள்:
யதிராஜா! என்னுடைய மனதாலும், வாக்காலும், உடலாலும், மூன்றுவிதமான அபசாரங்களைச் செய்கிறேன். என்னே சோகம். உங்களுக்கு துக்கத்தை விளைவிக்கக்கூடிய பலப்பல செயல்களைச் செய்கிறேன். இருப்பினும், தங்களுடைய திருவுள்ளத்திற்க்கு மாறாக எதையும் செய்யாதவன் போன்று நடிக்கிறேன். என் காலத்தை இவ்விதமாகவே செலவிடுகிறேன். உண்மையில் நான் ஒரு வெறுக்கக்கூடிய, இகழக்கூடிய போக்கிரியே.
விளக்கவுரை:
தம்முடைய நைச்சிய நிலையைத் தொடரும் ஸ்வாமி தான் பாகவத அபசாரம், பகவத் அபசாரம், அஸஹ்யாபசாரம் ஆகிய மூன்று குற்றங்களையும் உடையவன் என்று கூறுகிறார். எம்பெருமானாருடைய திருவுள்ளத்தை நோகசெய்துவிட்டதாகச் சொல்லுகிறார். இருப்பினும் எம்பெருமானார் வழிவகுத்த அத்தனை நெறிகளையும் முறைதவறாமல் பின்பற்றுவது போல் பாசாங்கு செய்வதாக கூறுகிறார். இவ்வுலகிலே தாம் இவ்வறே தன்னுடைய காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசாரியன் திருவடிகளே சரணம்
नित्यं त्वहं परिभवामि गुरुं च मन्त्रम् तद्देवतामपि न किञ्चिदहो बिभेमि।
इत्थं शठोऽप्यशठावत् भवदीयसङ्घे ह्रुष्टश्चरामि यतिराज ततोऽस्मि मुर्खः॥ ९
பொருள்:
யதிராஜா! என்னுடைய ஆசார்யனையும், அவர் உபதேசித்த மந்திரத்தையும், அந்த மந்திரத்தின் பொருளான எம்பெருமானையும் ஒவ்வொரு நாளும் நான் நிந்தனை செய்கிறேன். இவ்வறு செய்வதில் மிகச்சிறிதளவும் எனக்கு பயமோ, தயக்கமோ இல்லை. என்னே பரிதாபம்! ஆசாரியனையும், அவர் உபதேசித்த மந்திரத்தையும், மந்திரத்தின் பொருளையும் என்றென்றும் மதிக்கும் பக்தியுள்ள உம்முடைய சிஷ்ய குழாமிடையே நான் ஒரு உயர்ந்தவன் போன்று தைரியமாக உலவுகிறேன். உண்மையிலேயே நான் ஒரு போக்கிரி.
விளக்கவுரை:
இந்த பாசுரத்திலும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் தன்னுடைய நைச்யாநுசந்தானம் என்கிற நிலையையே தொடர்கிறார். ஸ்வாமி இங்கே மூன்று விதமான இழிச்செயல்களை விவரிக்கிறார்.
முதலாவது ஆசார்யனுக்குச் செய்யும் அவமதிப்பு, நிந்தனை (ஆசார்ய பரிபாவம்). ஆச்சார்யன் செய்த உபதேசத்தை அவமதித்தல், அலட்சியஞ்செய்தல், புறக்கணித்தல் இதில் அடங்கும். அதோடு தகுதியற்றவர்களுக்கு (அநாதிகாரிகள்) இந்த உபதேசத்தை வழங்குதலும் இதில் அடங்கும்.
இரண்டாவது மந்திரம் தொடர்பானது (மந்த்ர பரிபாவம்). மந்திரத்தின் பொருளை மறத்தலும், தவறாக அதன் பொருளைப் புரிந்துகொள்ளுதலும் இதில் அடங்கும்.
மூன்றாவது மந்திரம் விளக்கும் எம்பெருமானுக்கு இழைக்கும் நிந்தனை (தேவதா பரிபாவம்). தம்முடைய மனது, வாக்கு, செயல் ஆகியவற்றை எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களில் செலுத்துதல் இதில் அடங்கும்.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் தாம் இந்த மூன்று அபசாரங்களையும் புரிந்தவர் என்றும் அந்நிலைக்கு சிறிதும் மனக்கலக்கம் அடையாமலிருப்பவர் என்றும் குறை கூறுகிறார்.
பொருள்:
யதிராஜா! நான் ஒரு வேடதாரி, போக்கிரி. பிரபந்நன் என்று அழைத்துக்கொள்கிறேன், ஆனாலும் ஸாஸ்திரங்களிலே தடுக்கப்பட்டுள்ள காரியங்களைச் செய்வதில் ஈடுபடுகிறேன். என்னுடைய நடத்தையினால் தங்களுக்கு மிகுந்த துக்கத்தையே உண்டாக்குகிறேன். பக்தியும் நேர்மையும் உள்ள உங்களுடைய சிஷ்யர்களின் கூட்டத்திலே இருப்பதற்க்குத் தகுதியில்லாதவன் நான். ஆனாலும் நான் தங்களுடைய ஆத்ம சிஷ்யனாக பாசாங்கு செய்கிறேன். இத்தகைய என்மீது தயைசெய்து கருணை கொண்டு என்னை உயர்த்த வேண்டுமென்று இறைஞ்சுகிறேன்.
விளக்கவுரை:
இப்பாசுரத்திலும் மற்றும் வரும் இரண்டு பாசுரங்களிலும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்மை ஒழுக்கமில்லாத போக்கிரி என்று அழைத்துக்கொள்கிறார். எம்பெருமானாரின் தயையைக் கெஞ்சுகிறார். “நைச்யாநுசந்தானம்” என்ற மனநிலையில் ஸ்வாமிகள் இருக்கிறார். இந்நிலைக்கு “ஆத்ம கர்ஹணம்” அல்லது சுயபச்சாதாபம் என்றும் பெயர். இந்நிலையில் ஒரு பக்தன் தன்னுகைய குறைகளையெல்லாம் எண்ணி எண்ணி எம்பெருமாளிடமும் தன்னுடைய ஆசாரியனிடமும் கருணையையும், இரக்கத்தையும் (அனுகம்பா, தயா) வேண்டுகிறான். ஸ்வாமி மணவாள மாமுனிகளைப் போன்ற உயர்ந்த ஆச்சார்ய புருஷர்களிடம் யாதொரு குறையும் குணக்குறைவும் இல்லை. ஆனாலும் எம்பெருமானாரை அடைய முடியாத தங்களுடைய நிர்வேதம் என்ற இயலாமையால் "சந்சாரி பாவம்" என்ற நிலை அவர்களுக்குப் பிறக்கிறது.
உயர்ந்த பல வைணவ ஆசாரியர்கள் நைச்சியத்துடன் தங்களுடைய குற்றங்குறைகளைக் கருத்தில் கொண்டு எம்பெருமானின் தயையை வேண்டியிருக்கிறார்கள். ஸ்வாமி ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்திலே “ந நிந்தி3தம் கர்ம தத3ஸ்தி லோகே ஸஹஸ்ரஷோ யந்ந மயா வ்யதா4யி” என்று பாடுகிறார். இங்கே முகுந்தனிடம் ஸ்வாமி ஆளவந்தார் “எம்பெருமானே! நான் பல்லாயிரக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் செய்யாத பாபங்கள் எதுவுமே இல்லை. அந்த எல்லா பாபங்களும் இப்பொழுது முதிர்ந்து பலனை அளிக்க தயாராயிருக்கின்றன. பீதி நிறைந்த இந்த நம்பிக்கையில்லா சமயத்திலே தாங்களே ரக்ஷகன் என்று கதறுகிறேன்” என்று முறையிடுகிறார். ஸ்வாமி வேதாந்த தேசிகன் “ஜாநாம் அநாதி விஹிதாந் அபராத வர்காந்! ஸ்வாமிந் பயாத் கிமபி வக்துமஹம் ந ஸக்த:” என்று பாடியுள்ளார். “ஸர்வேச்வரனே! அநாதி காலமாக பலப்பல பாபங்களையெல்லாம் செய்து வந்தவனாகிய நான், தங்களுடைய பெருமைகளையெல்லாம் பேச வாயெழாதவண்ணம் பயத்துடன் தங்கள் முன் நிற்கிறேன். என்னுடைய பாப ரஸங்களால் அழுந்தப்பட்டு வெறும் ஊமையாக தங்கள் முன் நிற்கிறேன்” என்பதே இதன் பொருள். ஸ்வாமி தேசிகன் மற்றொரு இடத்திலே “அதர்ம ப்ரவணாநாம் அக்ரஸ்கந்த ப்ரவ்ருத்தம் அகத்தமாந விப்ரதீஸாரம் மாம்” என்று பாடியுள்ளார். இங்கே ஸ்வாமி தேசிகன் தம்மை குணபூர்த்தியற்றவன் என்றும், சக ஜீவராசிகளிடம் கருணையற்றவன் என்றும் கூறிக்கொள்கிறார். இத்தகைய ஆத்ம கர்ஹண, அகிஞ்சந்ய நிலையையே ஸ்வாமி மணவாள மாமுனிகள் காட்டியுள்ளார்.
ஆசாரியன் திருவடிகளே சரணம்
வ்ருத்த்யா பS¦ர்நரவபுஸ்த்வஹமீத்3ருஷோऽபி SQருத்யாதி3ஸித்3த4 நிகி2லாத்மகு3ணாSQரயோऽயம்
யதிராஜா! நான் மனித உருவிலே உள்ள மிருகம். உடலால் மனிதனாகவும் (நர வபு), செயலால் மிருகமாகவும் (பS¦ வ்ருத்தி) உள்ளவன் நான். இங்கனம் இருந்தும், நான் வேதங்களாலும், வேத அங்கங்களாலும் கொண்டாடப்படுகின்ற ஆத்ம குணங்களால் ஒளி விடும் உதாரணமானவன் என்று உலகத்தோரை ஏமாற்றுகிறேன். மற்றவர்களுக்கு நான் என்னைப் பற்றி காட்டும் விதத்திலுருந்து முற்றிலும் மாறுபட்டவன் நான். நான் ஒரு போலி பாகவதன். இகழக்கூடிய, வெறுக்கக்கூடிய, தாழ்ந்த இந்த நிலையில் நான் இருக்கிறேனே, அந்தோ பரிதாபம்!
ஸ்வாமி மணவாள மாமுனிகள் “நைச்யானுசந்தானம்” என்கிற “ஸவனிகர்ஷானுசந்தானம்” என்ற நிலையில் இருக்கிறார். தன்னுடைய இயலாமையைச் சிந்தித்து சுய பச்சாதாப நிலையிலே இருக்கிறார். ஸ்வாமிகள் “ஞான ஹீந: பS¦பி: ஸமாந:” என்ற மூதுரையை நினைவுகூர்கிறார். தனக்கு உண்மையான ஞானம் இல்லையென்றும் (ஞான ஹீந:) அநுஷ்டானங்களிலே மிகுந்த குறையுடயவனென்றும் (அநுஷ்டான வைகல்யம்) இறைஞ்சுகிறார். உலகத்தோர் என்னை ஸாஸ்திரங்களில் கொண்டாடப்படுகின்ற ஆதம குணங்களின் பொக்கிஷம் என்று வணங்குகின்றனர். என்னே சோகம்!! பாகவதன் என்று அழைக்கப்படுவதற்க்குக்கூட தகுதியல்லாதவன் நான். கருணைக் கடலே! தாயா மூர்த்தியே!! என்னை இப்பேரிடரிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறேன்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசாரியன் திருவடிகளே சரணம்
அல்பாऽபி மே ந ப4வதீ3ய பதா3ப்3ஜப4க்தி: Sப்3தா3தி3போ4க ருசிரந்வஹமேத4தே ஹா
மத்பாபமேவ ஹி நிதா3நமமுஷ்ய நாந்யத் தத்3வாரயார்ய யதிராஜ! த3யைகஸிந்தோ4!
பொருள்:
கருணைக் கடலே! ஆசார்யர்களின் மகுடமே! உம்முடைய திருவடித் தாமரைகளிடம் எனக்கு ஆழ்ந்த பிணைப்பு இல்லை. உம்முடைய திருவடித் தாமரைகளிடம் சிறிதளவேணும் பக்தியும் என்னிடம் இல்லை. சம்சார பெருங்கடளிலேயுள்ள சிற்றின்பங்களிலே என் ஆசை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. என்னே பரிதாபம்! என்னுடைய பாபங்களே இதற்குக் காரணம். மற்ற எந்தவொரு காரணத்தையும் என்னால் நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை. ஆகையினால், என்னுடைய இந்த பாபங்களை உம்முடைய பெருங்கருணையினாலே நீக்க வேண்டுமென்று இறைஞ்சுகிறேன்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசாரியன் திருவடிகளே சரணம்
எம் குலத்தின் அரசே! துன்பமும், வேதனையும் நிறைந்த இந்த சம்சார வாழ்க்கையிலே, மந்திரங்களிலே அரசனாகிய அஷ்டாக்ஷர மந்திரத்தினால் வழங்கப்படுகின்ற மூன்று சித்தாந்தங்களையும் மன உறுதியோடும் தடுமாற்றமின்றியும் பின்பற்ற வேண்டும் என்ற விருப்பம் வளரவேண்டும் என்ற வரத்தை இப்பொழுதே அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். குறைந்த அறிவையும், ஆற்றலையும் உடைய எனக்கு, கூரத்தாழ்வான், எம்பார், பட்டர் போன்ற மகான்களால் போற்றித் தொழத் தகுதியுடைய உம்முடைய திருவடித் தாமரைகளை என்றென்றும் தங்குதடையில்லாமல் தியானித்திருக்குமாறு அருளிச்செய்ய வேண்டுகிறேன்.
பொருள்:
அழகிய தாமரை மலரை அன்னப்பறவை எவ்வாறு தனது இருக்கையாக கொண்டுள்ளதோ, அது போன்று ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளையே தன்னுடைய நிரந்தரமான இருப்பிடமாகக் கொண்டுள்ள ஸ்வாமி இராமானுசரைத் தொழுகிறேன். மகரந்ததுகள்களால் சூல் கொண்டு தேன் நிரம்பியுள்ள நறுமணம் வீசும் தாமரை மலரின்மேல் அத்தேனைக் குடிக்கும் வண்டு எவ்வாறு அமர்ந்திருக்கிறதோ அது போன்று நம்மாழ்வாரின் திருப்பாத கமலத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன். திருக்கமலமுகத்தை உடைய பெரியாழ்வாருக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ஸ்வாமி இராமானுசர் சூரியனைப் போன்று விளங்குகிறார். அவர்களது திருமுகம் ஸ்வாமியை கண்ட மாத்திரத்திலே மலர்கின்றது. அந்த யதிராசனை நமஸ்கரிக்கின்றேன். கூரத்தாழ்வானைத் தன் திருவடிகளிலேயே கொண்டுள்ள எம்பெருமானாரைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
விளக்கவுரை :
எம்பெருமானாரைப் பற்றிய நான்கு கருத்துகளை ஸ்வாமி மணவாள மாமுனிகள் இப்பாசுரத்திலே அருளிச்செய்கிறார்.
1. ஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம் : பங்குனி உத்திர நன்நாளிலே திருவரங்கத்திலே அரங்கநாதன் தன்னுடைய அர்ச்சை ரூபத்திலிருந்து எழுந்து ஸ்வாமி இராமானுசருடன் உரையாடினான். ஸ்வாமி இராமானுசரை அவருடைய அந்திமக்காலம் வரை தன்னுடனேயே இருக்கும்படி விண்ணப்பித்தான் (“யவாத் ஸரீரபாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ”). மிகுந்த பாசத்துடன் அரங்கநாதன் ஸ்வாமி இராமானுசருடைய ப்ரபத்தியை ஏற்றுக்கொண்டான். தன்னுடைய திருவடித் தாமரையிலேயே ஸ்வாமி இராமானுசர் இருக்கவேணும் என்ற கருத்தையே எம்பெருமான் “அத்ரைவ” என்ற பதத்தின் மூலம் சுட்டிக்காட்டுகிறான். ராஜஹம்ஸத்தைப் போல ஸ்வாமி இராமானுசரும் அரங்கநாதனின் திருவடித் தாமரையிலேயே தன்னுடைய அந்திமக்காலம் வரை எழுந்தருளியிருந்தார்.
ராஜ ஹம்ஸத்துடன் ஸ்வாமி இராமானுசரை ஒப்பிடுதல் : அன்னப்பறவையான ராஜஹம்ஸம் எவ்வாறு பாலைத் தண்ணீரில் இருந்து பிரிக்க வல்லதோ, அதுபோன்று ஸ்வாமி இராமானுசர் ஸாஸ்திரங்களில் இருந்து அதன் ஸாரத்தைப் பிரிக்க வல்லவர் என்பதையே இந்த ஒப்பிடுதல் காட்டுகின்றது. மேலும் இது ஸ்வாமியுடைய பரமஹம்ஸ பரிவ்ராஜக ஆசார்யத்வத்தையும் காட்டுகிறது. எப்படி சேறு நிரம்பிய நெல் வயல்களிலே நீந்தும் அன்னத்தின் பாதங்கள் அந்த சேற்றிலே அமிழ்வதில்லையோ அது போன்று ஸ்வாமி இராமானுசரும் களங்கம் நிறைந்த இந்த சம்சார உலகத்திலே இருந்தாலும், சம்சார வாசனையினால் களங்கப்படுவதில்லை. இந்த ஒப்பிடுதலுக்கு ஈடாக ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி, நம்மாழ்வாரின் திருவிருத்த பிரபந்தத்தின் பலஸ்ருதியை குறிப்பிடுகிறார். திருவிருத்தத்தின் நூறு பாசுரங்களின் ஆழ்ந்த பொருளையும் அறிந்தவர்கள் சம்சாரம் என்னும் சேற்றிலே ஆழங்கால் படமாட்டார்கள் என்பது பலஸ்ருதி. இதற்க்கு வியாக்கியானம் அளிக்க ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி “ந பதநாதி ரதிம் ஹம்ஸ: கதாசித் கர்தமாம்பஸி” என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார்.
ஸ்வாமி இராமானுசர் தாயார் ரங்கநாயகியைப் போலவே புருஷகார க்ருத்யத்திலே ஈடுபடுபவர். எவ்வாறு தாயார் அரங்கநாதனிடம் ஜீவாத்மாக்களின் அபராதங்களைப் பொறுத்துக் கொண்டு ப்ரபந்நர்களுக்கு மோக்ஷத்தை அளிக்க வேண்டுகிறாளோ, அது போன்று ஸ்வாமி இராமானுசரும் வேண்டுகிறார். அன்னத்தின் நடையும் நடத்தையும் தாயாரை ஒத்தனவாக இருக்கின்றன. அது போன்றே எம்பெருமானாரும் விளங்குகிறார் என்பதே மாமுனிகளின் எண்ணம். ஸ்வாமி வேதாந்த தேசிகனும் தம்முடைய யதிராஜ ஸப்ததியின் 22வது பாசுரத்திலே எம்பெருமானாரை ராஜ ஹம்ஸத்துடன் ஒப்பிடுகிறார். இங்கு அரங்கநாதனின் பக்தர்களின் மனத்திலே அமர்ந்திருக்கும் ராஜஹம்ஸம் என்று ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கிறார்.
2. ஸ்ரீமத்பராங்குS பாதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் : முதல் பாசுரத்திலே மாமுனிகள் ஸ்வாமி இராமானுசரை “பராங்குச பாத பக்தம்” என்று காட்டுகின்றார். இரண்டாவது பாசுரத்திலே “ஸ்ரீமத்பராங்குS பாதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம்´என்று கொண்டாடுகின்றார். முதல் பாசுரத்திலே அருளியது “ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்” என்ற அம்சமாகும். இரண்டாம் பாசுரத்திலே அருளியது “குண ப்ரயுக்த தாஸ்யம்” என்ற அம்சமாகும். தேனுருஞ்சும் வண்டு எங்கனம் மலர்களிலே உள்ள தேனை அறிந்துகொண்டு அம்மலர்களை சுற்றுகின்றதோ, அங்கனம் ஸ்வாமி இராமானுசரும் திருவாய்மொழி என்னும் அருளிச்செயலில் பொதிந்துள்ள அமுதினும் இனிய பகவத் விஷயத்தை அனுபவிக்கவேண்டி நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளையே நாடுகின்றார். “தொண்டர்க்கு அமுதுன்ன சொல் மாலைகள் சொன்னேன்” என்று நம்மாழ்வாரே ஸாதித்துள்ளார். தேனுன்னும் வண்டைப்போலவே இராமானுசன் என்னும் வண்டும் நம்மாழ்வாரின் ஒரு பாசுரத்தில் இருந்து மற்றொரு பாசுரத்திற்குத் செல்லுகிறது என்று ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸாதிக்கிறார்.
3. ஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம் : பெரியாழ்வார் பட்டநாதன் என்று வழங்கப்படுபவர். திருமங்கையாழ்வார் பரகால நாதன் என்று வழங்கப்படுபவர். “ஆப்ஜம்” என்பது தாமரை மலரைக் குறிக்கும். “முகாப்ஜம்” என்பது தாமரை போன்ற முகம் என்பதைக் குறிக்கும். அத்தாமரை போன்ற முகத்தினை மலரவைக்கும் சூரியனாக ஸ்வாமி இராமானுசர் ஒப்பிடப்படுகிறார். பெரியாழ்வாரைப் போல எம்பெருமானுக்குத் துளசி கைங்கர்யத்திலே ஈடுபட்டிருந்ததாலும், திருமங்கையாழ்வாரைப்போல பிராகாரங்களையும், கோபுரங்களையும் அமைத்ததாலும், இவ்வாழ்வார்களின் திருமுகத்தை ஸ்வாமி மலரச் செய்தார் என்பது ஒரு நிர்வாகம். ஆழ்வார்களின் பாசுரங்களின் கருத்தை உணர்ந்து அவர்கள் கூறியபடி அனுஷ்டானங்களைக் கடைபிடித்ததாலும் இவ்வாழ்வார்களின் திருமுகத்தை ஸ்வாமி மலரச் செய்தார் என்பது மற்றொரு நிர்வாகம்.
4. ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம்: கூரத்தாழ்வான் ஸ்ரீவத்ஸசிஹ்நர் என்று வழங்கப்படுபவர். உடையவருடன் விசேஷமான தொடர்பை உடையவர். எம்பார் போன்ற மற்ற சிஷ்யர்களும் ஸ்வாமியின் அன்புக்கு பாத்திரமாயிருந்தாலும், கூரத்தாழ்வானிடமே ஸ்ரீபாஷ்யம் எழுதும் பெரும் பொறுப்பை ஸ்வாமி அளித்தார். பேர் சொல்ல தகுதியில்லா சோழ மன்னனின் சபைக்குச் சென்று இராமானுச தர்சனத்திற்காக தனது தர்சனத்தையே இழந்தவர் கூரத்தாழ்வான். எம்பெருமானாரிடம் கூரத்தாழ்வானின் பக்தி ஈடு இணையற்றது. ஆகையினாலேயே கூரத்தாழ்வான் “பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான்” என்று இராமானுச நூற்றந்தாதியிலே திருவரங்கத்து அமுதனாரால் போற்றப்படுகிறார். இந்த கூரத்தாழ்வானைத் தன் திருவடிகளிலே கொண்டுள்ளார் ஸ்வாமி இராமானுசர் என்பது ஒரு நிர்வாகம். ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி இங்கே மற்றொரு விளக்கத்தை ஸாதிக்கிறார். “ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம்” என்பதற்கு மாறாக “ஸ்ரீவத்ஸசிஹ்ந சரணம்” என்று கொண்டால், கூரத்தாழ்வான் ஸ்வாமி இராமானுசருடைய திருவடியாகவே விளங்குகிறார் என்ற பொருள் கொள்ளலாம். திருமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய திருவடியாகவே கருதப்படுவதுபோலே, கூரத்தாழ்வானும் எம்பெருமானாருடைய திருவடியாகவே அமைகிறார்.
யதிராஜ மீடே : ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த பாசுரத்தை “யதிராஜ மீடே” என்ற வணக்கத்துடன் தலைக்கட்டுகிறார். அரங்கநாதனின் திருவடித்தாமரைகளிலே ராஜஹம்ஸத்தைப்போல அமர்ந்திருப்பவரும், தேனுருஞ்சும் வண்டைப்போல நம்மாழ்வாரின் பாதங்களை நாடுபவரும், பெரியாழ்வார், திருமங்கையாழ்வாடைய தாமரை போன்ற திருமுகத்தை சூரியனாக மலரச்செய்பவருமான ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன்.
© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates