<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11037715\x26blogName\x3d%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://yathirajavimsati.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://yathirajavimsati.blogspot.com/\x26vt\x3d2479505561755297195', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Tuesday, April 26, 2005

11:51 AM - பாசுரம் பதினேழு


श्रुत्यग्रवेद्य निजदिव्यगुणस्वरूपः प्रत्यक्षतामुपगतस्त्विह रन्ग्गराजः।
वश्यस्सदा भवति ते यतिराज! तस्मात् शक्तस्स्वकीयजन पापविमोचने त्वम्॥
१७


SQ
ருத்யக்3ரவேத்3ய நிஜதி3வ்யகு3ணஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபக3தஸ்த்விஹ ரங்க3ராஜ:
SQயஸ்ஸதா34வதி தே யதிராஜ! தஸ்மாத் Sக்த்ஸ்ஸ்வகியஜந பாபவிமோசநே தவம் ||


பொருள்:

யதிராசனே! ஸ்ரீரங்கநாதன் உலகத்தோர் எல்லோருடைய சந்தோஷத்திற்க்காக ஸ்ரீரங்கத்திலே ஸேவை ஸாதிக்கிறான். வேதங்களினால் பிரகடணப்படுத்தப் பட்டுள்ள அர்த்தங்களாலேயே நம்மால் அவனுடைய கல்யாண குணங்களை புரிந்துகொள்ளமுடியும். நிகரில்லாத சக்தியையும், புகழையும் உடைய அந்த அரங்கநாதனே உமக்கு கட்டுப்பட்டு இருக்கிறான். ஆகையால், ஆசார்ய ஸார்வபெளமா! நீரே என்னுடைய துன்பங்களைப் போக்க வல்லவர்.

விளக்கவுரை:

அரங்கநாதன் ஸ்வாமி இரமானுசருடைய செல்வாக்குக்குக் கட்டுப்பட்டவன் என்பது உலகறிந்த உண்மை. இவ்வுண்மையை மாமுனிகள் எம்பெருமானாருக்கு நினைவு கூர்கிறார். ஸ்வாமி மணவாள மாமுனிகள் மேலே விளக்கிய பல பாசுரங்களில் எம்பெருமானின் கருணையைவிட எம்பெருமானாரின் கருணையையே வேண்டுகிறார். இதற்கு மறுபடியாக ஸ்வாமி இராமானுசர் திருவரங்கத்து அரங்கநாதனே மாமுனிகளின் துன்பங்களைப் போக்கி அவர் வேண்டும் வரங்களை அளிக்க வல்லவன், தான் அல்லன் என்று கூறுவதாகக் கொண்டு, அதற்கு இப்பாசுரத்திலே விளக்கம் அளிக்கிறார். அரங்கநாதனிடம் வேண்டாமல் ஸ்வாமி இராமானுசரிடம் வேண்டுவது பொருத்தமற்ற செயல் என்று தோன்றுவார்க்காக இப்பாசுரத்தை மாமுனிகள் வழங்குகிறார். ஸ்வாமி இராமானுசருக்கும் அரங்கநாதனுக்கும் இடையே சரணாகதி கத்யத்திலே நடந்த உரையாடலை இப்பாசுரத்திலே மாமுனிகள் நினைவுகூர்கிறார்.

மேலும், அரங்கநாதன் எம்பெருமானாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் என்பது ஒரு சிறு சம்பவத்தால் விளக்கப் படுகிறது. ஒரு சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவ சலவையாளன் ஒருவன் அரங்கநாதனின் பரிவட்டங்களை மிகச் சுத்தமாகத் தோய்த்து நல்லவண்ணம் மடித்து ஸ்வாமி இராமானுசரிடம் சமர்பித்தான். சலவையாளனின் இந்த கைங்கர்யத்தினால் திருவுள்ளத்திலே மிக்க சந்தோஷம் கொண்ட ஸ்வாமி இராமானுசர் அந்த சலவையாளனை அரங்கநாதனின் சன்னிதிக்கு அழைத்துச் சென்று அவனுக்கு அனுக்ரகம் செய்தருள அரங்கநாதனிடம் வேண்டினார். அரங்கநாதனும் அவ்வண்ணமே இசைந்து தம் திருக்கண்கள் மலர்ந்து ஆசார்யன் விண்ணப்பப்படியே அந்த சலவையாளனை அனுக்ரகித்தார். அப்பொழுது அரங்கநாதன் எம்பெருமானாரிடம் அந்த சலவையாளன் தாம் கிருஷ்ணாவதாரத்திலே எழுந்தருளியிருந்த போது தமக்குச் செய்த அபசாரத்தையும் மன்னித்துவிட்டதாகத் திருவாக்கு அருளினார். கிருஷ்ணாவதாரத்தின் போது அந்த சலவையாளன் கம்ஸனுடைய சபையிலே பணியாற்றியவன். ஒருசமயம் மதுராவிலே கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் அவர்களுடைய பரிவட்டங்களைக் கொடுக்க மறுத்தவன். அத்தகையவனையும் எம்பெருமானனருடைய விண்ணப்பத்தினால் அரங்கநாதன் அனுக்ரகித்தது ஸ்வாமி இராமானுசரிடம் அரங்கநாதனுக்கு உள்ள மேன்மையான பந்தத்தையே விளக்குகிறது. இந்த சம்பந்தத்தையே ஸ்வாமி மணவாள மாமுனிகள் இங்கே குறிப்பிடுகிறார். இத்தகைய உயர்ந்த சம்பந்தம் உடையவராதலால் ஸ்வாமி இராமானுசரே மாமுனிகளின் துன்பங்களைப் போக்க வல்லவர் எனத் தலைக்கட்டுகிறார்.


ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்



Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates