<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11037715\x26blogName\x3d%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://yathirajavimsati.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://yathirajavimsati.blogspot.com/\x26vt\x3d2479505561755297195', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Monday, April 25, 2005

1:34 PM - பாசுரம் பதிநான்கு



वाचामगोचर महागुण देशिकाग्र्य कूराधिनाथ कथिताखिल नैच्यपात्रं।
एशऽहमेव न पुनर्जगतीद्रुशस्तत् रामानुजार्य करुणैव तु मद्गतिस्ते॥ १४


வாசாமகோ
3சர மாஹாகு3ண தே3S¢காக்3ர்ய கூராதி4நாத2 கதி2தாகி2ல நைச்யபாத்ரம் |
ஏஷா
ஹமேவ ந புநர்ஜக3தீத்3ருSஸ்தத் ராமாநுஜார்ய! கருணைவ து மத்33திஸ்தே ||

பொருள்:

இராமானுசா, ஆசாரியனே! இந்த உலகிலே தண்டனைக்குரிய, குற்றமுடைய, உபயோகமற்ற குணங்களையெல்லாம் பொருந்திய ஒருவன் நான் ஒருவனாகவே இருக்கமுடியும். என்னைத்தவிர வேறு எவரும் இதற்க்குப் பொருத்தமாகவே முடியாது. ஆகையினாலேயே, என்னுடைய இந்த குற்றங்களிலிருந்தும், தடைகளிலிருந்தும் என்னை நீக்க உம்முடைய கருண ஒன்றே பொருத்தமானது என்று முடிவுற்றேன். அக்கருணையால் என்னை காக்க வேண்டுகிறேன்.

விளக்கவுரை:

மிகச்சிறந்த ஆசார்யனும், எம்பெருமானார் இராமானுசரின் தலையாய சீடருமாய கூரத்தாழ்வான் ஸ்ரீவரதராஜஸ்தவம், ஸ்ரீவைகுந்தஸ்வம் என்ற உயர்ந்த பிரபந்தங்களிலே தம்மை இவ்வுலகிலேயே தாழ்ந்த ஒரு பாபி என்று தாழ்த்திக்கொள்கிறார். ஒரு சுய பச்சாதாபத்தினாலேயே இவ்வாறு ஆழ்வான் கூறுகிறார். எம்பெருமானின் முன் உயர்ந்த நம்முடைய ஆச்சார்யர்கள் இங்கனம் சுய கண்டனத்தினால் தங்களைத் தாழ்த்திக்கொள்வது அவர்களிடம் அத்தகைய குற்றங்கள் உள்ளன என்பதனாலன்று. அவர்கள் அங்கனம் செய்வது நம்முடைய நன்மையை மனதிலேகொண்டே ஆகும். நம்முடைய பாபங்களை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே ஆகும். இந்நிலையையே ஸ்வாமி மணவாள மாமுனிகளும் காட்டுகிறார்.

மாமுனிகள் “வாசாமகோசர மாஹாகுண தேS¢காக்ர்ய” என்று கூரத்தாழ்வானைக் கொண்டாடுகிறார். கூரத்தாழ்வானின் எண்ணற்ற மங்களகரமான கல்யாண குணங்களை நாவினால் விவரிக்க இயலாதென்று வியக்கிறார். மேலே கூறிய பிரபந்தங்களிலே கூரத்தாழ்வான் காட்டியுள்ள நைச்சியாநுசந்தானத்திற்க்குக் காரணம் நம்மையெல்லாம் பாபங்களிலிருந்து விலக்க எம்பெருமானிடம் வேண்டுவதற்க்கே ஆகும். ஸ்வாமி மணவாள மாமுனிகள் கூரத்தாழ்வான் காட்டியுள்ள அத்தகைய நைச்யாநுசந்தானத்திற்க்கும் தாமே எல்லா உலகங்களிலும் பொருத்தமானவன் என்கிறார். ஆகையினால் இராமானுசரின் கருணைக்கு இலக்காக மாமுனிகளை விட வேறு எவரும் இருக்கமுடியாது என்று தலைக்கட்டுகிறார். திருவரங்கத்து அமுதனாரும் இக்கருத்தையே “நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின்கண் அன்றிப் புகல் ஒன்றுமில்லை, அருட்க்கும் அஃதேபுகல்” என்ற இராமானுச நூற்றந்தாதி பாசுரத்திலே அருளிச்செய்கிறார்.


ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்




Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates