<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11037715\x26blogName\x3d%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://yathirajavimsati.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://yathirajavimsati.blogspot.com/\x26vt\x3d2479505561755297195', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Friday, April 15, 2005

1:35 PM - பாசுரம் நான்கு



नित्यम् यतीन्द्र तव दिव्यवपुस्स्म्रुतौ मे सक्तं मनो भवतु वाक् गुणकीर्तनेऽसौ।
क्रुत्यञ्च दास्यकरणे तु करद्वयस्य व्रुत्त्यन्तरेऽस्तु विमुख़ं करणत्रयञ्च॥ ४


நித்யம் யதீந்த்3ர! தவ தி3வ்யவபுஸ்ஸ்ம்ருதெள மே
ஸக்தம் மநோ ப4வது வாக் கு3ணகீர்தநேऽஸெள |
க்ருத்யஞ்ச தா3ஸ்யகரணே து கரத்3வயஸ்ய வ்ருத்த்யந்தரேऽஸ்து விமுக2ம் கரணத்ரயஞ்ச ||

பொருள்:

ஸந்யாஸிகளின் சக்ரவர்த்தியே! உம்முடைய திவ்ய மங்கள விஹ்ரகத்திலேயே என் மனது தியானித்திருக்க வேண்டும். உம்முடைய கல்யாண குணங்களைப் பற்றி பேசுவதிலேயே என் வாக்கு ஈடுபட வேண்டும். என் இரு கைகளும் உம்முடைய கைங்கர்யத்திலேயே ஈடுபட வேண்டும். இம்மூன்று கரணங்களும் (மனது, வாக்கு, காயம்) வேறு எல்லா கார்யங்களிலிருந்தும் திருப்பப்பட வேண்டும்.

விளக்கவுரை:

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த இராமானுச நூற்றந்தாதியின் 100-102ம் பாசுரங்களின் சாராமே இந்தப் பாசுரமாகும். இம்மூன்று பாசுரங்களில், முதலில் அமுதனார் தம்முடைய மனது எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை அனுபவிப்பதைப் பற்றி தெரிவிக்கிறார். இங்கே மற்றைய விஷயங்களிலிருந்து விடுபடுவதற்கான வரத்தை வேண்டுகிறார். இரண்டாவதாக, அமுதனார் தன்னுடைய வாக்கும் எம்பெருமானாருடைய வைபவத்தைப் பற்றியே பேச வேண்டும் என்ற வரத்தை வேண்டுகிறார். இது சிஷ்யனுடைய உத்தம கல்பம் ஆகும். மூன்றாவதாக, அமுதனார் தன்னுடைய மனது, வாக்கு, மெய் அனைத்துமே எம்பெருமானார் தொடர்புடையது என்று தெரிவிக்கிறார். என் மனது உம்முடைய கல்யாண குணங்களை தியானம் செய்வதிலே மகிழ்ந்து இருக்கிறது. என்னுடைய நாக்கு “இராமானுசா” என்று எம்பெருமானாருடைய நாம ஸங்கீர்த்தனத்திலேயே திளைத்திருக்கிறது. என் கைகள் எம்பெருமானாரையே தொழுகின்றது. என் கண்கள் எம்பெருமானாரையே நோக்குகிறது என்று அமுதனார் “நையும் மனமும்" என்ற பாசுரத்திலே அருளிச் செய்கிறார். தம்முடைய ஆசாரியன் அளித்த ஞானத்தினாலேயே மனது, வாக்கு, செயல் அனைத்தும் எம்பெருமானாரிடம் திளைத்துள்ளன என்று தலைக்கட்டுகிறார்.

ஸ்வாமி மணவாள மாமுனிகளும் அமுதனாரது பாங்கிலேயே பிரார்த்திக்கிறார். “மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்” என்று ஆண்டாள் அருளியது போன்று மாமுனிகள் மற்ற விஷயங்கள் அனைத்தையும் புறக்கணிக்கிறார். எம்பெருமானாரின் அங்க செளந்தர்யத்தை ஸ்வாமி வேதாந்த தேசிகனும் தம்முடைய யதிராஜ ஸப்ததியின் 11வது பாசுரத்திலே கொண்டாடுகிறார். முப்புரி நூலையும், ஊர்த்வ புண்ட்ரத்தையும் தரித்தவரும், மூன்று லோகங்களிலும் உண்டான புண்ணியங்களை கையிலே த்ரிதண்டமாக கொண்டிருப்பவரும், ப்ரபந்நர்களை மோக்ஷ சாம்ராஜ்யத்திற்க்கு கொண்டுசெல்பவரும், மிகப்பிரகாசமான தோற்றத்தையுடையவருமான சந்நியாசிகளின் சக்ரவர்த்தியாகிய ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன் என்று ஸ்வாமி தேசிகன் கொண்டாடுகிறார். எம்பெருமானாரின் கம்பீரமான அழகை எம்பார் சொல் ஓவியமாகத் தீட்டுகிறார். “எதிராசன் வடிவழகு என்னிதயத்திலுள்ளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை என்க்கு எதிரே” என்று பரவசப்படுகிறார். ஆழ்ந்த ஆச்சார்ய அனுபவத்தினாலேயே இவ்வாறு இம்மகான்களால் இங்கனம் கொண்டாட முடிகிறது. ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்முடைய ஆர்த்திப் பிரபந்தத்திலேயும் எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை வாழி வாழி என்று கொண்டாடுகிறார். “சீராருமெதிராசர் திருவடிகள் வாழி! திருவரையிற் சாத்திய செந்துவராடை வாழி!” என்று அருளிச்செய்கிறார்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாருக்கு மங்களாஸாசனம் செய்தது போன்றே எம்பார், ஸ்வாமி தேசிகன், ஸ்வாமி மணவாள மாமுனிகளும் எதிராசரான எம்பெருமானாருக்கு மங்களாஸாசனம் செய்கிறார்கள்.

ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்




Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates