<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11037715\x26blogName\x3d%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://yathirajavimsati.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://yathirajavimsati.blogspot.com/\x26vt\x3d2479505561755297195', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Monday, April 18, 2005

2:27 PM - பாசுரம் ஐந்து


अष्टाक्षराख़्य मनुराज पदत्रयार्थ निष्ठां ममात्र वितराद्य यतीन्द्र नाथ।
शिष्टाग्रगण्यजन सेव्यभवत्पदाब्जे ह्रुष्टाऽस्तु नित्यमनुभुय ममास्य बुद्धिः॥ ५
அஷ்டாக்ஷராக்2ய மநுராஜ பத3த்ரயார்த2 நிஷ்டா2ம் மமாத்ர விதராத்3ய யதீந்த்3ர நாத2!
S¢ஷ்டாக்3ரக3ண்யஜந ஸேவ்யப4வத்பதா3ப்3ஜே ஹ்ருஷ்டாऽஸ்து நித்யமநுபூ4ய மமாஸ்ய பு3த்3தி4:
பொருள்:

எம் குலத்தின் அரசே! துன்பமும், வேதனையும் நிறைந்த இந்த சம்சார வாழ்க்கையிலே, மந்திரங்களிலே அரசனாகிய அஷ்டாக்ஷர மந்திரத்தினால் வழங்கப்படுகின்ற மூன்று சித்தாந்தங்களையும் மன உறுதியோடும் தடுமாற்றமின்றியும் பின்பற்ற வேண்டும் என்ற விருப்பம் வளரவேண்டும் என்ற வரத்தை இப்பொழுதே அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். குறைந்த அறிவையும், ஆற்றலையும் உடைய எனக்கு, கூரத்தாழ்வான், எம்பார், பட்டர் போன்ற மகான்களால் போற்றித் தொழத் தகுதியுடைய உம்முடைய திருவடித் தாமரைகளை என்றென்றும் தங்குதடையில்லாமல் தியானித்திருக்குமாறு அருளிச்செய்ய வேண்டுகிறேன்.

விளக்கவுரை:

ஸ்வாமி மணவாள மாமுனிகள் “மம ஆத்ர அத்ய விதர” என்று பிரார்த்திக்கிறார். சம்சார துன்பங்களிலே இன்னும் உழன்று கொண்டு இருக்கும்போதே அவர் உள்ளத்திலே விருப்பம் துளிர்ந்துவிட்டது. ஆகையால் அவ்வரத்தை உடனடியாக வழங்க வேண்டுகிறார். ஸ்வாமிகளின் உள்ளத்திலே துளிர்ந்த ஆசைதான் என்ன? “ப்ரணவம், நம:, நாராயணாய” என்ற மூன்று பதங்களையும் அவற்றின் பொருளாகிய “அநந்யார்ஹ ஸேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வம்” என்ற மூன்று தத்துவங்களையும் உள்ளடக்கியுள்ள மந்திரங்களின் அரசனாகிய அஷ்டாக்ஷர மந்திரத்திலே மனது என்றென்றும் ஆழங்கால் பட்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அஷ்டாக்ஷர மந்திரமாகிய திருமந்திரத்தை மந்திரங்களின் அரசன் என்று வழங்குகிறார். மநு என்ற சொல் மந்திரம் என்பதைக் குறிக்கிறது. ஆகையால் மநுராஜம் என்பது மந்திரங்களின் அரசன் என்பதைக் குறிக்கிறது. நம் ஸம்பிரதாயத்திலே திருமந்திரம் மந்திர ராஜனாகவும், த்வயம் மந்திர ரத்தினமாகவும் கொண்டாடப்படுகிறது. முமுக்ஷுப்படி போன்ற கிரந்தங்கள் வழங்குவதைப் போலவே ஸ்வாமி மணவாள மாமுனிகளும் திருமந்திரத்திலே மூன்று பதங்கள் உள்ளன என்று அங்கீகரிக்கிறார். “அநந்யார்ஹ ஸேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வம்” என்ற மாபெரும் சித்தாந்தங்களுக்கு சான்றாக இம்மூன்று பதங்களின் பொருளும் விளக்கப்பட்டுள்ளன. இம்மூன்று சித்தாந்தங்கள் யாவை?

முதலாவது அநந்யார்ஹ ஸேஷத்வம். இது இரண்டு பதங்களை உடையது. “ஜீவாத்மா எம்பெருமான் ஒருவனுக்கே உரித்தானது” என்பதே அநந்யார்ஹ என்ற பதத்தின் பொருள். “ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு ஒருவருக்கும் ஜீவாத்மா அடிமையில்லை” என்பதே ஸேஷத்வம் என்ற பதத்தின் பொருள். போற்றுதற்க்குரிய பக்த்தியுடனும், வணக்கத்துடனும் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவனே ஸேஷன் என்று வழங்கப்படுகிறான். பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே கைங்கர்யம் செய்ய வேண்டியதே ஜீவாத்மாவின் கடமை என்பதே ஸேஷத்வ ஞானம் ஆகும். எவன் ஒருவன் இக்கைங்கர்யத்தை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு அனுபவிக்கிறானோ அவன் ஸேஷி எனப்படுவான். எல்லா ஜீவன்களின் ஒப்புயற்வில்லாத தலைவன் பகவான். ஆகையால் அவன் ஸர்வ ஸேஷி என்று வணங்கப்படுகிறான்.

இரண்டாவது அநந்ய சரணத்வம். பிரபத்தியிலே ஜீவாத்மா அனுபவிப்பதே இது. ஜீவாத்மா தான் அந்நந்ய சரண்யன் என்று உணர்ந்து கொள்கிறான். இந்த ஜீவனால் கர்ம, ஞான, பக்தி யோகங்களை கடைபிடிக்க இயலாது. ஆகையால் ஆதரவற்று இருக்கிறான். இந்த ஆதரவற்ற நிலையிலே எம்பெருமானின் கிருபையைப் பெற பிரபத்தியைத் தவிர வேறொரு உபாயமில்லை. வேறு உபாயம் எதுவும் இல்லை என்பதே இப்பதத்தின் பொருள்.

மூன்றாவது அநந்ய போக்யத்வம். பரமேகாந்திகளின் நிலையாகும் இது. எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே சிந்தனையைச் செலுத்துவதில் சந்தோஷப்படும் நிலை அது. ஜீவாத்மாவின் ஒரே சந்தோஷம் அல்லது போக்யம் எம்பெருமானுக்கு செய்யும் கைங்கர்யமேயாகும். ஸ்வாமி மணவாள மாமுனிகள் எம்பெருமானாரிடம் “மநு ராஜ பத3 த்ரய அர்த்2 நிஷ்டா2ம் ஆத்ர அத்3யா விதர” என்று பிரார்த்திக்கிறார். மந்திர ராஜத்தின் பதங்களின் மகிமையை உணர்ந்த ஸ்வாமி, அந்த அர்த்தங்கள் தம் மனதிலே வழுவாமல் நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். அந்த நிஷ்டையைப் பிரார்த்திக்கிறார்.

ஸ்வாமி “அத்ர” மற்றும் “அத்ய” என்ற பதங்களின் மூலம் அவர் வேண்டும் வரத்தின் இடத்தையும், காலத்தையும் குறிக்கிறார். “அத்ர” என்ற பதத்தினால் இவ்வரம் தாபத்ரயம் நிறைந்த இந்த சம்சார உலகிலேயே வழங்கப்பட வேண்டுமென்கிறார். “அத்ய” என்ற பதத்தினால் மீதமிருக்கும் தேக யாத்திரை முழுவதும் மனது திருமந்திரம் விளக்கும் மூன்று தத்துவங்களிலே ஆழ்ந்து இருக்க வேண்டுமென்கிறார்.

சரணாகதி என்பது “ஸ்வ நிஷ்டை”, “உக்தி நிஷ்டை”, “ஆசார்ய நிஷ்டை”, “பாகவத நிஷ்டை” என்ற நான்கு வகைகளைச் சேர்ந்தது. பாகவத நிஷ்டையின் உயர்வை திருமங்கையாழ்வார் “உனதடியார்க்கடிமை” என்று வழங்குகிறார். பாகவத ஸேஷத்வமே மந்திர ராஜமான திருமந்திரத்தின் செம்பொருள் என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்கிறார். ஆகையால் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பாகவத நிஷ்டையையே இந்த பாசுரத்தின் இரண்டாவது பாகத்திலே கையாளுகிறார். “S¢ஷ்டாக்3ரக3ண்யஜந ஸேவ்யப4வத்பதா3ப்3ஜே ஹ்ருஷ்டாऽஸ்து நித்யமநுபூ4ய மமாஸ்ய பு3த்3தி4”.

ஸ்வாமி தம்முடைய மனதை கீழ்தரமானதென்றும், மங்கள குணங்கள் இல்லததென்றும் (நீசன், நிறைவொன்றுமிலேன்) என்று விவரிக்கிறார். அத்தகைய தம்முடைய மனது பாகவதோத்தமராகிய ஆசார்ய ஸார்வபெளமராகிய ஸ்வாமி இராமானுசருடைய திருவடித் தாமரைகளைப்பற்றிய சிந்தனையினால் உயர்த்தப்பட வேண்டுமென்கிறார். அத்திருவடித் தாமரைகளின் மேன்மையை மேலும் விவரிக்கிறார். கூரத்தாழ்வான், அனந்தாழ்வான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் போன்ற உயர்ந்த மகான்களான் கொண்டாடப்பட்டது அத்திருவடிகள். பாகவத நிஷ்டையினைச் சார்ந்த சரணாகதியையும் கைங்கர்யத்தையுமே ஸ்வாமி பிரார்த்திக்கிறார்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசாரியன் திருவடிகளே சரணம்




Blogger enRenRum-anbudan.BALA said...

ungkaL SEvai thodarattum !!!
vAzththukkaL

enRenRum anbudan
BALA  


Blogger ROSAVASANTH said...

பாசுரம் ஆழ்வார்களால் *தமிழில்* எழுதப்பட்டவைகளை குறிப்பதாக நினைத்துகொண்டிருந்தேன். இங்கே வரும் எந்த 'பாசுரமும்' தமிழில் இல்லையே? இவற்றை பாசுரம் என்று எப்படி சொல்கிறீர்கள்? அல்லது பாசுரம் என்றால் என்னவென்று விளக்குவீர்களா? நன்றி!  


Blogger சம்பத் குமார் said...

அன்புள்ள திரு.rosavasanth அவர்களுக்கு

பாசுரம் என்பது ஒரு பொதுச்சொல். அது ஒரு செய்யுளையோ, ஒரு பாடலையோ குறிக்கிறது. இதன் அடிப்படியிலேயே அடியேன் பாசுரம் என்ற சொல்லை பிரயோகப்படுத்தியுள்ளேன். மேலும், வைணவ சம்பாஷணையிலே பாசுரம் என்ற சொல் தமிழ் பாடல்கள் மற்றும் வடமொழி ஸ்லோகங்களையும் குறிப்பதாகவே உபயோகப் படுத்தப்படுகிறது.
உங்களது கருத்துக்கு மிக்க நன்றி.
அடியேன்
இராமானுச தாஸன்
சம்பத் குமார்.  


Blogger Srikanth said...

Hi,
Nice blog. My hearty wishes to you. Continue writing.

Anbudan
Srikanth  


Blogger enRenRum-anbudan.BALA said...

Dear Rosavasanth,

Though Sampath kumar seems to be correct in his observation about the meaning of 'paasuram', people generally
associate 'paasuram' with AzvAr's songs (prabandham).

ஆழ்வார் பாசுரங்கள் குறித்த எனது பதிவுகளை தாங்கள் படித்திருக்கிறீர்களா? சுட்டிகள் கீழே! நேரம் கிடைக்கும்போது
(ஆர்வமும் இருந்தால்!) படியுங்கள். நன்றி.

http://balaji_ammu.blogspot.com/2005/02/3.html
http://balaji_ammu.blogspot.com/2005/02/2_13.html
http://balaji_ammu.blogspot.com/2004/11/blog-post_09.html
http://balaji_ammu.blogspot.com/2004/12/blog-post_22.html

என்றென்றும் அன்புடன்
பாலா  


Blogger ROSAVASANTH said...

நன்றி!  


Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates