<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11037715\x26blogName\x3d%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://yathirajavimsati.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://yathirajavimsati.blogspot.com/\x26vt\x3d2479505561755297195', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Wednesday, April 20, 2005

1:57 PM - பாசுரம் ஒன்பது



नित्यं त्वहं परिभवामि गुरुं च मन्त्रम् तद्देवतामपि न किञ्चिदहो बिभेमि।
इत्थं शठोऽप्यशठावत् भवदीयसङ्घे ह्रुष्टश्चरामि यतिराज ततोऽस्मि मुर्खः॥


நித்யம் த்வஹம் பரிப
4வாமி கு3ரும் ச மந்த்ரம் தத்3தே3வதாமபி ந கிஞ்சித3ஹோ பி3பே4மி |
இத்த2ம் Sடோ2ப்யS2வத் ப4வதீ3யஸங்கே4 ஹ்ருஷ்டாSQசராமி யதிராஜ ததோஸ்மி மூர்க2: ||


பொருள்:

யதிராஜா! என்னுடைய ஆசார்யனையும், அவர் உபதேசித்த மந்திரத்தையும், அந்த மந்திரத்தின் பொருளான எம்பெருமானையும் ஒவ்வொரு நாளும் நான் நிந்தனை செய்கிறேன். இவ்வறு செய்வதில் மிகச்சிறிதளவும் எனக்கு பயமோ, தயக்கமோ இல்லை. என்னே பரிதாபம்! ஆசாரியனையும், அவர் உபதேசித்த மந்திரத்தையும், மந்திரத்தின் பொருளையும் என்றென்றும் மதிக்கும் பக்தியுள்ள உம்முடைய சிஷ்ய குழாமிடையே நான் ஒரு உயர்ந்தவன் போன்று தைரியமாக உலவுகிறேன். உண்மையிலேயே நான் ஒரு போக்கிரி.


விளக்கவுரை:

இந்த பாசுரத்திலும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் தன்னுடைய நைச்யாநுசந்தானம் என்கிற நிலையையே தொடர்கிறார். ஸ்வாமி இங்கே மூன்று விதமான இழிச்செயல்களை விவரிக்கிறார்.

முதலாவது ஆசார்யனுக்குச் செய்யும் அவமதிப்பு, நிந்தனை (ஆசார்ய பரிபாவம்). ஆச்சார்யன் செய்த உபதேசத்தை அவமதித்தல், அலட்சியஞ்செய்தல், புறக்கணித்தல் இதில் அடங்கும். அதோடு தகுதியற்றவர்களுக்கு (அநாதிகாரிகள்) இந்த உபதேசத்தை வழங்குதலும் இதில் அடங்கும்.

இரண்டாவது மந்திரம் தொடர்பானது (மந்த்ர பரிபாவம்). மந்திரத்தின் பொருளை மறத்தலும், தவறாக அதன் பொருளைப் புரிந்துகொள்ளுதலும் இதில் அடங்கும்.

மூன்றாவது மந்திரம் விளக்கும் எம்பெருமானுக்கு இழைக்கும் நிந்தனை (தேவதா பரிபாவம்). தம்முடைய மனது, வாக்கு, செயல் ஆகியவற்றை எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களில் செலுத்துதல் இதில் அடங்கும்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் தாம் இந்த மூன்று அபசாரங்களையும் புரிந்தவர் என்றும் அந்நிலைக்கு சிறிதும் மனக்கலக்கம் அடையாமலிருப்பவர் என்றும் குறை கூறுகிறார்.


ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசாரியன் திருவடிகளே சரணம்




Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates