<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/11037715?origin\x3dhttp://yathirajavimsati.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Wednesday, April 20, 2005

12:44 PM - பாசுரம் எட்டு

दुःख़ावहोऽहमनिशं तव दुष्टचेष्टः शब्दादिभोग निरतश्शरणगताख़्यः।
त्वत्पादभक्त इव शिष्ट जनौघमध्ये मिथ्या चरामि यतिराज ततोऽस्मि मूर्ख़ः॥ ८

து3:கா2வஹோऽஹமநிSம் தவ து3ஷ்டசேஷ்ட: Sப்3தா3தி3போ4க நிரதSQSரணாக3தாக்2ய:
த்வத்பாத34க்த இவ S¢ஷ்ட ஜநெளக4மத்4யே மித்2யா சராமி யதிராஜ ததோऽஸ்மி மூர்க2:


பொருள்:

யதிராஜா! நான் ஒரு வேடதாரி, போக்கிரி. பிரபந்நன் என்று அழைத்துக்கொள்கிறேன், ஆனாலும் ஸாஸ்திரங்களிலே தடுக்கப்பட்டுள்ள காரியங்களைச் செய்வதில் ஈடுபடுகிறேன். என்னுடைய நடத்தையினால் தங்களுக்கு மிகுந்த துக்கத்தையே உண்டாக்குகிறேன். பக்தியும் நேர்மையும் உள்ள உங்களுடைய சிஷ்யர்களின் கூட்டத்திலே இருப்பதற்க்குத் தகுதியில்லாதவன் நான். ஆனாலும் நான் தங்களுடைய ஆத்ம சிஷ்யனாக பாசாங்கு செய்கிறேன். இத்தகைய என்மீது தயைசெய்து கருணை கொண்டு என்னை உயர்த்த வேண்டுமென்று இறைஞ்சுகிறேன்.

விளக்கவுரை:

இப்பாசுரத்திலும் மற்றும் வரும் இரண்டு பாசுரங்களிலும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்மை ஒழுக்கமில்லாத போக்கிரி என்று அழைத்துக்கொள்கிறார். எம்பெருமானாரின் தயையைக் கெஞ்சுகிறார். “நைச்யாநுசந்தானம்” என்ற மனநிலையில் ஸ்வாமிகள் இருக்கிறார். இந்நிலைக்கு “ஆத்ம கர்ஹணம்” அல்லது சுயபச்சாதாபம் என்றும் பெயர். இந்நிலையில் ஒரு பக்தன் தன்னுகைய குறைகளையெல்லாம் எண்ணி எண்ணி எம்பெருமாளிடமும் தன்னுடைய ஆசாரியனிடமும் கருணையையும், இரக்கத்தையும் (அனுகம்பா, தயா) வேண்டுகிறான். ஸ்வாமி மணவாள மாமுனிகளைப் போன்ற உயர்ந்த ஆச்சார்ய புருஷர்களிடம் யாதொரு குறையும் குணக்குறைவும் இல்லை. ஆனாலும் எம்பெருமானாரை அடைய முடியாத தங்களுடைய நிர்வேதம் என்ற இயலாமையால் "சந்சாரி பாவம்" என்ற நிலை அவர்களுக்குப் பிறக்கிறது.

உயர்ந்த பல வைணவ ஆசாரியர்கள் நைச்சியத்துடன் தங்களுடைய குற்றங்குறைகளைக் கருத்தில் கொண்டு எம்பெருமானின் தயையை வேண்டியிருக்கிறார்கள். ஸ்வாமி ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்திலே “ந நிந்தி3தம் கர்ம தத3ஸ்தி லோகே ஸஹஸ்ரஷோ யந்ந மயா வ்யதா4யி” என்று பாடுகிறார். இங்கே முகுந்தனிடம் ஸ்வாமி ஆளவந்தார் “எம்பெருமானே! நான் பல்லாயிரக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் செய்யாத பாபங்கள் எதுவுமே இல்லை. அந்த எல்லா பாபங்களும் இப்பொழுது முதிர்ந்து பலனை அளிக்க தயாராயிருக்கின்றன. பீதி நிறைந்த இந்த நம்பிக்கையில்லா சமயத்திலே தாங்களே ரக்ஷகன் என்று கதறுகிறேன்” என்று முறையிடுகிறார். ஸ்வாமி வேதாந்த தேசிகன் “ஜாநாம் அநாதி விஹிதாந் அபராத வர்காந்! ஸ்வாமிந் பயாத் கிமபி வக்துமஹம் ந ஸக்த:” என்று பாடியுள்ளார். “ஸர்வேச்வரனே! அநாதி காலமாக பலப்பல பாபங்களையெல்லாம் செய்து வந்தவனாகிய நான், தங்களுடைய பெருமைகளையெல்லாம் பேச வாயெழாதவண்ணம் பயத்துடன் தங்கள் முன் நிற்கிறேன். என்னுடைய பாப ரஸங்களால் அழுந்தப்பட்டு வெறும் ஊமையாக தங்கள் முன் நிற்கிறேன்” என்பதே இதன் பொருள். ஸ்வாமி தேசிகன் மற்றொரு இடத்திலே “அதர்ம ப்ரவணாநாம் அக்ரஸ்கந்த ப்ரவ்ருத்தம் அகத்தமாந விப்ரதீஸாரம் மாம்” என்று பாடியுள்ளார். இங்கே ஸ்வாமி தேசிகன் தம்மை குணபூர்த்தியற்றவன் என்றும், சக ஜீவராசிகளிடம் கருணையற்றவன் என்றும் கூறிக்கொள்கிறார். இத்தகைய ஆத்ம கர்ஹண, அகிஞ்சந்ய நிலையையே ஸ்வாமி மணவாள மாமுனிகள் காட்டியுள்ளார்.

ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசாரியன் திருவடிகளே சரணம்


No comment

Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates