<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11037715\x26blogName\x3d%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://yathirajavimsati.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://yathirajavimsati.blogspot.com/\x26vt\x3d2479505561755297195', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Wednesday, April 20, 2005

12:37 PM - பாசுரம் ஏழு


व्रुत्त्या पशुर्नरवपुस्त्वहमीद्रुशोऽपि श्रुत्यादिसिद्ध निख़िलात्मगुणाश्रयोऽयम्।
इत्यादरेण क्रुतिनोऽपि मिथः प्रवक्तुं अद्यापि वञ्चनपरोऽत्र यतीन्द्र वर्ते॥ ७

வ்ருத்த்யா பர்நரவபுஸ்த்வஹமீத்3ருஷோऽபி SQருத்யாதி3ஸித்34 நிகி2லாத்மகு3ணாSQரயோऽயம்

இத்யாத3ரேண க்ருதிநோऽபி மித2: ப்ரவக்தும் அத்3யாபி வஞ்சநபரோऽத்ர யதீந்த்3ர வர்தே


பொருள்:

யதிராஜா! நான் மனித உருவிலே உள்ள மிருகம். உடலால் மனிதனாகவும் (நர வபு), செயலால் மிருகமாகவும் (ப வ்ருத்தி) உள்ளவன் நான். இங்கனம் இருந்தும், நான் வேதங்களாலும், வேத அங்கங்களாலும் கொண்டாடப்படுகின்ற ஆத்ம குணங்களால் ஒளி விடும் உதாரணமானவன் என்று உலகத்தோரை ஏமாற்றுகிறேன். மற்றவர்களுக்கு நான் என்னைப் பற்றி காட்டும் விதத்திலுருந்து முற்றிலும் மாறுபட்டவன் நான். நான் ஒரு போலி பாகவதன். இகழக்கூடிய, வெறுக்கக்கூடிய, தாழ்ந்த இந்த நிலையில் நான் இருக்கிறேனே, அந்தோ பரிதாபம்!

ஸ்வாமி மணவாள மாமுனிகள் “நைச்யானுசந்தானம்” என்கிற “ஸவனிகர்ஷானுசந்தானம்” என்ற நிலையில் இருக்கிறார். தன்னுடைய இயலாமையைச் சிந்தித்து சுய பச்சாதாப நிலையிலே இருக்கிறார். ஸ்வாமிகள் “ஞான ஹீந: பபி: ஸமாந:” என்ற மூதுரையை நினைவுகூர்கிறார். தனக்கு உண்மையான ஞானம் இல்லையென்றும் (ஞான ஹீந:) அநுஷ்டானங்களிலே மிகுந்த குறையுடயவனென்றும் (அநுஷ்டான வைகல்யம்) இறைஞ்சுகிறார். உலகத்தோர் என்னை ஸாஸ்திரங்களில் கொண்டாடப்படுகின்ற ஆதம குணங்களின் பொக்கிஷம் என்று வணங்குகின்றனர். என்னே சோகம்!! பாகவதன் என்று அழைக்கப்படுவதற்க்குக்கூட தகுதியல்லாதவன் நான். கருணைக் கடலே! தாயா மூர்த்தியே!! என்னை இப்பேரிடரிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறேன்.

ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசாரியன் திருவடிகளே சரணம்



Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates