<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/11037715?origin\x3dhttp://yathirajavimsati.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Monday, April 25, 2005

11:42 AM - பாசுரம் பதிமூன்று


तापत्रयीजनित दुःखनिपातिनोऽपि देहस्थितौ मम रुचिस्तु न तन्निव्रुत्तौ।

एतस्य कारणमहो! मम पापमेव नाथ! त्वमेव हर तद्यतिराज! शीघ्रं॥ १३


தாபத்ரயீஜநித து3:க2நிபாதிநோபி தே3ஹஸ்தி2தெள மம ருசிஸ்து ந தந்நிவ்ருத்தெள
ஏதஸ்ய காரணமஹோ! மம பாபமேவநாத! த்வமேவ ஹர தத்3யதிராஜ! ஷீக்4ரம்


பொருள்:

சந்யாசிகளின் அரசனே! மூன்று விதமான தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களினால் என் உடம்பு துன்பமும், வேதனையும், நோய்களையும் அடைகிறது. என்னால் அத்துன்பங்களைத் தாங்கமுடியவில்லை. இருப்பினும், இவ்வுடலை விட்டு நீங்க எனக்கு எனக்கு எந்த விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் நான் இந்த உடலை நன்கு பேணிப் பாதுகாக்கிறேனே! நான் குவித்து வைத்திருக்கும் என்னற்ற பாபங்களே என்னுடைய இந்த மனநிலைக்குக் காரணம். எந்தோ பரிதாபம்! என்னுடைய பரமாசாரியனே! தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களிலிருந்து நான் விடுபட என் பாபங்களையெல்லாம் அகற்ற இறைஞ்சுகிறேன்.

விளக்கவுரை:

ஆத்யாத்மிகம், ஆதிபெளதிகம், ஆதிதைவிகம் என்பனவையே தாப த்ரயங்கள். முதலாவதான ஆத்யாத்மிகம் என்பது நம் கைகளாலும், கால்களாலும், மற்றைய உடல் உருப்புகளாலும் உண்டாகும் துன்பங்கள். இது இரண்டு வகைப்படும். சரீரம் மற்றும் மானஸம். சரீரம் என்பது வியாதி எனவும், மானஸம் என்பது ஆதி எனவும் உணரப்படுகிறது. இவையிரண்டும் சேர்ந்து ஆத்யாத்மிகம் எனப்படுகிறது.

இரண்டாவதான ஆதிபெளதிகம் என்பது விலங்குகளாலும், மனிதர்களாலும், அசுரர்களாலும் உண்டாகும் துன்பங்களாகும்.

மூன்றாவதான ஆதிதைவிகம் என்பது காற்று, மழை, குளிர் போன்ற இயற்க்கையின் சீற்றத்தினால் உண்டாகும் துன்பங்களாகும்.

இம்மூன்றையும் சேர்த்தே “தாபத்ரயீஜநித து3:க2” என்று ஸ்வாமி மணவாள மாமுனிகள் சொல்லுகிறார். தாப த்ரயங்களினால் உண்டாகும் இத் துன்பங்களை எல்லாம் தாம் இன்பம் என்று எண்ணும் குற்றத்திற்க்குத் ஆளானதாக மாமுனிகள் கூறுகிறார். இத்தகைய தம்முடைய நிலைக்குத் தன்னுடைய பாபங்களே காரணம் என்கிறார். இந்நிலையில், எங்கும் நிறைந்துள்ள எம்பெருமானை முற்றும் உணர்ந்த என்பெருமானாரிடம் தன்னுடைய பாபங்களையெல்லாம் கருணையுடன் நீக்கும்படி வேண்டுகிறார்.

ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்



No comment

Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates