<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/11037715?origin\x3dhttp://yathirajavimsati.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Wednesday, April 20, 2005

2:00 PM - பாசுரம் பத்து


हा हन्त हन्त मनसा क्रियया च वाचा योऽहं चरामि सततं त्रिविधापचारान्।
सोऽहं तवाप्रियकरः प्रियक्रुद्वदेव कालं नयामि यतिराज! ततोऽस्मि मूर्खः॥ १०


ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோஹம் சராமி ஸததம் த்ரிவிதா4பசாராந்

ஸோஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்3வதே3காலம் நயாமி யதிராஜ! ததோஸ்மி மூர்க2:

பொருள்:

யதிராஜா! என்னுடைய மனதாலும், வாக்காலும், உடலாலும், மூன்றுவிதமான அபசாரங்களைச் செய்கிறேன். என்னே சோகம். உங்களுக்கு துக்கத்தை விளைவிக்கக்கூடிய பலப்பல செயல்களைச் செய்கிறேன். இருப்பினும், தங்களுடைய திருவுள்ளத்திற்க்கு மாறாக எதையும் செய்யாதவன் போன்று நடிக்கிறேன். என் காலத்தை இவ்விதமாகவே செலவிடுகிறேன். உண்மையில் நான் ஒரு வெறுக்கக்கூடிய, இகழக்கூடிய போக்கிரியே.

விளக்கவுரை:

தம்முடைய நைச்சிய நிலையைத் தொடரும் ஸ்வாமி தான் பாகவத அபசாரம், பகவத் அபசாரம், அஸஹ்யாபசாரம் ஆகிய மூன்று குற்றங்களையும் உடையவன் என்று கூறுகிறார். எம்பெருமானாருடைய திருவுள்ளத்தை நோகசெய்துவிட்டதாகச் சொல்லுகிறார். இருப்பினும் எம்பெருமானார் வழிவகுத்த அத்தனை நெறிகளையும் முறைதவறாமல் பின்பற்றுவது போல் பாசாங்கு செய்வதாக கூறுகிறார். இவ்வுலகிலே தாம் இவ்வறே தன்னுடைய காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்.

ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசாரியன் திருவடிகளே சரணம்




No comment

Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates