अन्तर्बहिस्सकलवस्तुषु सन्तमीशं अन्धः पुरस्स्थितमिवाहमवीक्षमाणः।
कन्दर्पवश्य ह्रुदयस्सततं भवामि हन्त! त्वदग्रगमनस्य यतीन्द्र! नार्हः॥ १२
அந்தர்ப3ஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீSம் அந்த4: புரஸ்ஸ்தி2தமிவாஹமவீக்ஷமாண:
கந்த3ர்பவஸ்ய ஹ்ருத்3யஸ்ஸத்தம் ப4வாமி ஹந்த! த்வத3க்3ரக3மநஸ்ய யதீந்த்ர! நார்ஹ:
பொருள்:
யதிராஜா! தங்கள் முன் நிற்க்கவும் நான் தகுதியற்றவன். எங்கனம் பிறவிக் குருடனைப் தன் முன்னே உள்ளவற்றை அறியும் திறன் இல்லாதிருக்கிறனோ, அங்கனம் நானும் அந்தர்யாமியாய் எல்லாவற்றின் உள்ளும் புறமும் நிறைந்து இருக்கும் எம்பெருமானை அறியத் திறன் அற்றவனாயிருக்கிறேன். எப்பொழுதும் மோகத்திற்க்குக் கட்டுப் பட்டவனாய் உள்ளேன். என்னே பரிதாபம். தங்கள் முன் இங்கனம் நிற்க யாதொரு தகுதியுமற்று இருக்கிறேனே!
விளக்கவுரை:
முந்தைய பாசுரத்திலே, ஸ்வாமி மணவாள மாமுனிகள் “புந: புந: அக4ம் யதிராஜ! குர்வே” என்று அருளினார். எல்லா கார்யங்களுக்கும் சாக்ஷியாகவும் (ஸர்வ காம சாக்ஷி) ஸ்துலமாகவும், ஸுக்ஷமமாகவும் நிறைந்து விளங்கும் எம்பெருமானை ஸ்வாமி எங்கனம் ஏமாற்ற இயன்றது என்ற வினாவிற்க்கு மறுமொழியாகவே இந்த பாசுரம் அமைகிறது. தம்முடைய மறுமொழியிலே ஸ்வாமி, தான் ஒரு பிறவிக்குருடனைப் போன்றவனென்றும், அதனாலேயே எங்கும் நிறை பரம்பொருளை உணரத் தகுதியுன்றி இருப்பதாகவும் வருந்துகிறார். இத்தகைய தம்முடைய நிலையிலே எம்பெருமானாரின் முன் நிற்க தமக்கு என்ன தகுதியுண்டு என்று அஞ்சுகிறார்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசாரியன் திருவடிகளே சரணம்
1 comment:
aathirai said...