<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/11037715?origin\x3dhttp://yathirajavimsati.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Tuesday, April 26, 2005

8:26 AM - பாசுரம் பதினைந்து


शुद्धात्म यामुनगुरूत्तम कूरनाथ भट्टाख्य देशिकवरोक्त समस्तनैच्यं।
अद्यास्त्यसङ्कुचितमेव मयीह लोके तस्माद्यतीन्द्र करुणैव तु मद्गतिस्ते॥ १५

த்3தா4த்ம யாமுநகு3ரூத்தம கூரநாத24ட்டாக்2ய தே3S¢கவரோக்த ஸமஸ்தநைச்யம் |
அத்
3யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே தஸ்மாத்3யதீந்த்3ர கருணைவ து மத்33திஸ்தே


பொருள்:

இராமானுசா! உயர்ந்த உத்தமமான ஆசார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பராசர பட்டர் போன்றோர் வெளிப்படுத்திய சுய கண்டன உணர்வுகள் அனைத்தையும் முழுமையாக நான் சொந்தமாகக் கொண்டிருக்கிறேன். ஆகையால், யதிராசனே! உம்முடைய கருணைக்கு நானே பொருத்தமானவன்.

விளக்கவுரை:

ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த பாசுரத்திலும் நைச்சிய பாவத்தையே தொடர்கிறார். எம்பெருமானாரின் கருணைக்குத் தம்மை விட சிறந்த தகுதியானவன் இருக்கவே முடியாது என்று அறுதியிடுகிறார். மாமுனிகள் இங்கே குறிப்பிடும் உயர்ந்த ஆசார்யர்கள் அனைவரையும் சுத்த ஆத்மாக்கள் என்றும், குற்றமற்றவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். அர்ச்சா மூர்த்தியாகத் திருவரங்கத்திலும், காஞ்சியிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் கருணையை வேண்டியே தங்களை பாபிகள் என்று கூறியுள்ளனர்.

ஸ்வாமி ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்திலே தாம் உபயோகமற்றவன் என்று இரண்டு ஸ்லோகங்களிலே விவரிக்கிறார். “ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே (23)” மற்றும் “அமர்யாத: க்ஷூத்ர: (62)” ஆகிய ஸ்லோகங்களில் ஸ்வாமி ஆளவந்தார் தம்மை சாஸ்திரங்களினால் புறக்கணிக்கப்பட்ட, இகழக்கூடிய, வெறுக்கக்கூடிய எல்லா பாபங்களையும் செய்தவன் என்றும், அகந்தையுள்ளவனென்றும், தாழ்ந்தவனென்றும் கூறிக்கொள்ளுகிறார். அவர் இவ்வாறு கூறுவதற்க்குக் காரணம் நம்போன்றவர்களையெல்லாம் தம்முடைய திருவுள்ளத்தில் கொண்டு எம்பெருமானிடம் அவன் கருணையைப் பெருவதற்க்காகவேயாம்.

கூரத்தாழ்வான் மேலே கூறியதுபோலே தாப த்ரயங்களினால் பலப்பல குற்றங்களைச் செய்தவன் தான் என்று கூறுகிறார். ஸ்வாமி மணவாள மாமுனிகள் அதே பாவனையை இங்கே வெளிப்படுத்துகிறார். இத்தகைய பாவனையையே பராசர பட்டரும் அரங்கநாதனிடம் வெளிப்படுத்துகிறார்.

ஸ்வாமி தேசிகன் தம்முடைய நைச்யாநுசந்தான நிலையை பலப்பல ஸ்லோகங்களில் வெளிப்படுத்தி உள்ளார். திருவஹீந்திபுரம் தேவநாதப் பெருமாளுடன் நெஞ்சுருக்கும் தம்முடைய சம்பாஷணையிலே ஸ்வாமி தேசிகன் தன்னுடைய குறைகளினால் பச்சாதாபம் கொண்டு தம்மை தாழ்திக்கொள்கிறார். இந்த ஸ்லோகங்கள் அவருடைய மனநிலையைக் குறிக்கின்றனவேயன்றி அவருக்கு குற்றமேதும் இல்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

தேவநாதனே! சாஸ்திரங்களின் உண்மையான பொருளை அறியாத அங்ஞானக் கடல் உண்மையில் நான் ஒருவனே ஆகும். பாபங்களையே செய்வது என்று சபதம் எடுத்துக்கொண்டுள்ளவர்களில் முதன்மையாக நான் நிற்கிறேன். உன்னுடைய கட்டளைகளையெல்லாம் வரம்பு மீறுவதிலும் நானே முதன்மையானவன். இப்படி உதவியற்ற நிலையில் இருக்கும் நானே உன்னுடைய கருணைக்கு மிகவும் தகுதியுடையவன். எல்லாம் அறிந்த ஸர்வ ஞானஸ்தனாகிய நீ உன்னுடைய கருணைக்கு என்னைத்தவிர வேறு ஒருவரை எவ்வாறு கருதலாம்?

மற்றொரு இடத்திலே ஸ்வாமி தேசிகன் தன்னை அபராத சக்ரவர்த்தி என்று கூறிக்கொண்டு எம்பெருமானின் கருணையை இறஞ்சுகிறார்.


ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்


No comment

Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates