<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11037715\x26blogName\x3d%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://yathirajavimsati.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://yathirajavimsati.blogspot.com/\x26vt\x3d2479505561755297195', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
யதிராஜ விம்ஸதி

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதிக்கு ஒரு தமிழ் விளக்கவுரை. 

Tuesday, April 26, 2005

1:51 PM - பாசுரம் பதினெட்டு


कालत्रयेऽपि करणत्रय निर्मिताति पापक्रियस्य शरणं भगवत्क्षमैव।
सा च त्वयैव कमलारमणेऽर्थिता यत् क्षेमस्स एव हि यतीन्द्र! भवच्छ्रितानाम्॥ १८

காலத்ரயேபி கரணத்ரய நிர்மிதாதி பாபக்ரியஸ்ய Sரணம் ப43வத்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலாரமணே
ர்தி2தா யத் க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்3ர! ப4வச்ச்2ரிதாநாம் ||


பொருள்:

ஸ்வாமி இராமானுசா! மனத்தாலும், உடலாலும், வாக்காலும் கணக்கற்ற பாபங்களைப் புரிந்த ஒருவனுக்கு திருவரங்கத்திலே எழுந்தருளியிருக்கும் அரங்கநாதன் ஒருவனே முக்காலத்திலும் புகலிடம். உண்மையில், அரங்கநாதனிடம் பங்குனி உத்திர நன்நாளிலே சரணாகதி கத்யம் மூலம் தாங்கள் செய்த பிரார்த்தனையே எங்களுடைய பாதுகாப்பாகும். அதுவே எங்களுடைய ஒரே அரண்.

விளக்கவுரை:

எம்பெருமானார் சரணாகதி கத்யத்திலே அரங்கநாதனிடம் செய்த பிரார்த்தனையையும், அதற்கு அரங்கநாதனின் மறுபடியையும் இங்கே ஸ்வாமி மணவாள மாமுனிகள் நினைவு கூர்கிறார். அரங்கநாதன் ஸ்வாமி இராமானுசரின் சரணாகதியை ஏற்று எம்பெருமானார் மட்டுமின்றி எம்பெருமானாரின் சம்பந்தம் உடைய எல்லோரும் தன்னுடைய கருணைக்குப் பாத்திரமானவர்கள் என்று அறுதியிட்டான். இந்த சம்பந்த வரத்தையே மாமுனிகள் இங்கே வேண்டுகிறார். ஆசார்ய இராமானுச சம்பந்தம் நம்முடைய பெரும் அதிருஷ்டமே ஆகும்.


ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்




Post a Comment

© சம்பத் குமார் 2005 - Powered for Blogger by Blogger Templates